பக்கம்:நாவுக்கரசர்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 ந்ாவுக்கரசர்

நிறுத்தத் திருவுள்ளங்கொண்டு திருவருள் வண்ணமாகிய திருநீற்றினை நினைந்து பாண்டி நாட்டிற்குப் புறப்படு கின்றார்; புறப்படுங்கால் நாவுக்கரசர் சமணர்களின் வஞ்சகச் செயல்களை அவரிடம் கூறுகின்றார்: உடல் கழுவாத அமணர், உள்ளமும் கழுவாதவர்கள்; மாயமும் சாலமும் வல்லவர்கள்; பல்லவ வேந்தன் பக்க பலத்தால் பல தீய தொழில்களை எனக்குப் புரிந்து என்னைப்பலவாறு அலைக்கழித்தனர். அந்தப் பாதகர்முன் தாங்கள் செல்ல நான் இசையேன்” என்கின்றார் வாகீசர் பெருமான்.

கமங்கையர்க்கரசியும் குலச்சிறையாரும் தெய்வத் திருநீற்றின் காதலர்கள்; புண்ணியச் சைவம் புவிதழைக்கப் போற்றுபவர்கள். அவ்விருவரையும் காணக் கருத்துடை யேன், தென்னகத்தில் அமணர்களின் தீயநெறி அவித்துத் திருநீறு வளர்வதற்குச் செயல் புரிவேன். இஃது உம் ஆணை’ என்று கூறுகின்றார் காழிப் பிள்ளையார். *அமணர்களின் கொடுமைகளை நானே அழித்து வருகின் றேன். நீர் அங்கு வருதல் வேண்டா. சமணர்களின் மாயங் களைச் சிதைத்துச் சைவநெறி பாரிக்கும் கருத்துடை யேன்” என்று மேலும் ஞானப் பிள்ளையார் நாவுக்கரச ரிடம் கூற, அவரும் மறுக்க மாட்டாது வாளா இருக்கின் றார். தென்னவன் நாடு நோக்கிச் சண்பை வேந்தரின் பொன்னடிப் புனிதப் பயணம் தொடங்குகின்றது.

நடுநாட்டில் சமணப் பேயை விரட்டி அடித்து அதன. கொட்டத்தை அடக்கியவர் அப்பர் பெருமான். அது போன்றதொரு வாய்ப்பு புகலி வேந்தர்க்கும் வேண்டும் என்பது இறைவன் திருவுள்ளம்போலும். தமிழகத்தில் சிவ ஞானக் கன்றின் ஞானப் பயணம் தொடர்வதற்கு இது. நல்லதொரு சூழலாக அமைகின்றது. ஆணை நமது ஆணை நமது என்றெல்லாம் பாடும் சிவக்கன்று இங்கு ,ஆணை உமது என்று கூறிச் செல்லும்போது அன்பினால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/229&oldid=634229" இலிருந்து மீள்விக்கப்பட்டது