பக்கம்:நாவுக்கரசர்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிமையில் தல வழிபாடு 189

செந்தமிழ் மாலைகளால் போற்றுகின்றார். மைகொள் கண்ணுமை (5. 56) என்ற திருக்குறுந்தொகைப் பாமாலை யில்,

கேடு மூடிக் கிடந்துண்ணு நாடது தேடி நீர்திரி யாதே சிவகதி கூட லாந்திருக் கோளிலி யீசனைப் பாடு மின் இர வோடு பகலுமே. (6)

என்பது ஒன்பதாவது பாடல். முன்னமே (5.57) என்ற முதற்குறிப்புடைய திருக்குறுந்தொகைப் பதிகமும் இத் தலத்து ஈசனைப் பற்றியதே.

விண்ணு ளார்தொழு தேத்தும் விளக்கினை மண்ணு ளார்வினை தீர்க்கும் மருந்தினைப் பண்ணு ளார்.பயி லுங்திருக் கோளிலி அண்ண லாரடி யேதொழு துய்மினே. (2)

காளும் நம்முடை நாள்க ளறிகிலோம் ஆளும் நோய்களோ ரைம்பதோ டாறெட்டும் ஏழை மைப்பட் டிருந்துர்ே கையாதே கோளி லியான் பாதமே கூறுமே. (3)

என்பன இப்பாமாலையின் இரண்டாவது, மூன்றாவது நறு மலர்கள்.

நிலையத்திலிருந்து கல் தொலைவு. சப்தவிடகங்களுள் இங்குள்ளவர் அவனிவிடங்கர். நடனம் பிருங்க நடனம், குண்டையூரிற் பெற்ற நெல்லைத் திருவாரூருக்கு எடுத்துச் செல்ல ஆள் வேண்டிப் பதிகம் பாடிச் சுந்தரர் பூத கணங்’ களால் ஆரூருக்குக் கொண்டு சேர்த்த அற்புதம் நிகழ்ந்த தலம். குண்டையூர் இங்கிருந்து கல் தொலைவிலுள்ளது. குண்டையூரிலிருந்து திருவாரூர் 16 கல் தொலைவிலுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/232&oldid=634233" இலிருந்து மீள்விக்கப்பட்டது