பக்கம்:நாவுக்கரசர்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. தனிமையில் தலவழிபாடு



காழிப் பிள்ளையார் மதுரை மாநகருக்கு ஏகியதை யும், நாவுக்கரசர் பெருமான் தல வழிபாட்டை மீண்டும் தொடங்கியதையும் சேக்கிழார் பெருமான்,

வேணு புரக்கோன் எழுந்தருள

விடைகொண் டிருந்த வாகீசர் பூணு மன்பால் மறைக்காட்டிற்

புனிதர் தம்மைப் போற்றிசைத்துப் பேணி யிருந்தங் குறையுநாள்

பெயர்வார் வீழி மழலையமர் தானு வின்றன் செய்யகழல்

மீண்டுஞ் சார நினைக்கின்றார்.1 என்று கூறுவர். திருஞானசம்பந்தரைப் பிரிய மனம் இல்லாத நாவுக்கரசருக்குத் திருவீழி மிழலை,முன் அவர்கள் இருவரும் சேர்ந்து பலகாலம் தங்கியிருந்த நினைவுகளை எழுப்பியதால் அத்தலத்திற்கு ஏக நினைந்தார் எனச் சிவக் கவிமணி சி. கே. சுப்பிரமணிய முதலியார் குறிப்பிடுவார். முதலில் வாகீசர் கோளிலி’ என்ற தலத்திற்கு வரு கின்றார். இத்தலத்து எம்பெருமானை அப்பர் இரண்டு

1. பெ. பு. திருநாவுக் 290 2. கோளிலி (திருக்குவளை): மயிலாடுதுறை.காரைக் குடி இருப்பூர்தி வழியிலுள்ள திருநெல்லிக்காவல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/231&oldid=634232" இலிருந்து மீள்விக்கப்பட்டது