பக்கம்:நாவுக்கரசர்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிமையில் தல வழிபாடு 193

வன்னியூரரிடம் விடைபெற்றுக் கொண்டு கருவிலிக் கொட்டிட்டை என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். வந்த வர், ‘மட்டிட்ட குழலார்’ (5. 69) என்ற திருக்குறுந் தொகைச் செந்தமிழ் மாலையால் வழிபடுகின்றார்.

கில்லா வாழ்வு நிலைபெறும் என்றெண்ணிப் பொல்லா வாறு செயப்புரி யாதுநீர் - கல்லா ரும்மதிள் சூழ்தண் கருவிலிக் கொல்லே றுர்பவன் கொட்டிட்டை சேர்மினே. (7) என்பது ஏழாவது வாடா நறுமலர். இப்பதிகம் அறம் பாடும் குறுந்தொகை அரன்பாடி உய்க” என்று அறிவுறுத்தும் தனிச் சிறப்புடையது.

கொட்டிட்டைப் பெருமானிடம் விடைபெற்றுக் கொண்டு திருநல்லம்’ என்ற திருத்தலத்திற்குவருகின்றார் வாகீசர் பெருமான். கொல்லத்தான் (5.43) என்ற முதற் குறிப்பினையுடைய திருக்குறுந்தொகைச் செந்தமிழ் மாலையால் தலத்து ஈசனை வழுத்துகின்றார்.

உரைத ளர்ந்துட லார்நடுங் காமுனம் கரைவி டையுடை யானிடம் நல்லமே பரவுமின்; பணி மின்;பணி வாரொடே விரவு மின்:விர வாரை விடுமினே. (5) என்பது இம்மாலையில் ஐந்தாவது மலர்.

7. கருவிலிக் கொட்டிட்டை : கும்பகோணத்திலிருந்து 12 கல் தொலைவு. நாச்சியார் கோயில், குடவாயில் இத் தலங்கட்குப் போகும் பேருந்து வழி. காவிரியின் திென் கரைத் தலம். ஊர்-கருவிலி: கொட்டிட்டை-திருக்கோயில். அப்பர் தேவாரம் மட்டும் உடைய தலம்.

8. கல்லம் (கோனேரி ராஜபுரம்): ஆடுதுறை இருப் பூர்தி நிலையத்திலிருந்து 5 கல்_தொலைவு. காவிரியின் தென்கரைத் தலம். இத்தலத்திற்கு அப்பர் பெருமான் வந்த சூழலும் பாடிய சந்தர்ப்பமும் தெளிவாக அறியக்கூட வில்லை. . -

நா-18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/236&oldid=634237" இலிருந்து மீள்விக்கப்பட்டது