பக்கம்:நாவுக்கரசர்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 : நாவுக்கரசர்

நல்ல நக்கனிடம் விடைபெற்றுக்கொண்டு திருலேக் குடி என்ற தலத்திற்கு வருகின்றார். வைத்தமாடும் (5.72) என்ற முதற் குறிப்புடைய திருக்குறுந்தொகை செந்தமிழ்ப் பதிகம் பாடி நீலக்குடியானைச் சேவிக்கின்றார்.

கல்லி னோடெனைப் பூட்டி அமண்கையர் ஒல்லை நீர்புக நூக்களின் வாக்கினால் நெல்லு நீள்வயல் லேக்குடி யரன் நல்ல நாமம் நவிற்றிஉய்ங் தேனன்றே. (7) என்பது ஏழாவது தமிழ் மணம் கமழும் வாடா நறுமலர். இதில் தம்மைக் கல்லில் கட்டி கடலில் பாய்ச்சிய நிகழ்ச்சியை நினைவுகூர்கின்றார்.

நீலக்குடியானிடம் விடைபெற்றுக் கொண்டு திருவா வடு துறைக்கு வந்து ‘மாயிரு ஞாலம் எல்லாம்’ (4.56) என்ற திருநேரிசைப் பதிகத்தால் மாசிலாமணியீசர் மலரடி களைப் போற்றிப் பரவுகின்றார்.

மாயிரு ஞால மெல்லாம்

மலரடி வணங்கும் போலும் பாயிருங் கங்கை யாளைப்

படர்சடை வைப்பர் போலும் காயிரும் பொழில்கள் சூழ்ந்த

கழுமல ஆரார்க் கம்பொன் ஆயிரங் கொடுப்பர் போலும்

ஆவடு துறைய னாரே (1) . என்பது பதிகத்தின் முதல் நேரிசை. இதில் ஆவடுதுறை இறைவன் காழிப் பிள்ளையாருக்கு ஆயிரம் பொன்

9. நீலக்குடி (தென்னல்குடி): ஆடுதுறை என்ற இருப்பூர்தி நிலையத்திலிருந்து 2 கல் தொலைவு.

10. ஆவடுதுறை (திருவாவடுதுறை): மு ன் ன ர் எழுதப் பெற்றுள்ளது. பக்கம் 97 காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/237&oldid=634238" இலிருந்து மீள்விக்கப்பட்டது