பக்கம்:நாவுக்கரசர்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிமையில் தல வழிபாடு 195

நிறைந்த உலவாக் கிழியினைக் கொடுத்தருளிய அருட் செயலை நினைந்துருகிப் போற்றுவதைக் காணலாம்.

நாவுக்கரசரின் உண்ணா நோன்பு : பின்னர் பழையாறை (வடதளி)” என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். அங்குச் சமணர்களால் மறைக்கப்பெற்ற வடதளி என்னும் கோயிலின் அருகில் வரும்பொழுது அவருடைய திருக் கைகள் தாமே கூப்பி வடதளி இறைவனைச்சேவிக்கின்றன. அவ்விடத்தில் எதிர்ப்பட்டார் சிலர் இது சிவபெருமா னுக்கு உரிய திருக்கோயிலே. இப்பொழுது இங்குள்ள விமானம் அமணர்களால் மறைத்துக் கட்டப்பெற்ற பொய் யான விமானமே” எனக் கூறுகின்றனர். இச் செய்தியை அறிந்த நாவுக்கரசர் அவ்விமானத்தின் அருகே ஓரிடத்தில் அமர்ந்து இறைவன் இணையடிகளைச் சிந்திக்கின்றார். பெருமானே, அமணர் வஞ்சனையால் மறைத்த மறைப் பிணையகற்றி அவர்களின் ஆற்றலைச் சிதைத்திடுவீர். அடியேன் நுமது திருமேனி வண்ணத்தைக் கண்டு சேவிக் காமல் இவ்விடத்தை விட்டு அகலேன்’ என்றுகூறி உண்ணா நோன்பினை மேற்கொள்ளுகின்றார்.12

11. பழையாறை (வடதளி): கும்பகோணம் இருப்பூர்தி நிலையத்திற்கு மேற்கில் அடுத்துள்ள தாராசுரம் நிலையத் திலிருந்து 1; கல் தொலைவு, அமர்நீதி நாயனார் வாழ்ந்த தலம். . - -

ஒரு காலத்தில் இராஜதானியாக இருந்த பழையாறை இப்போது ஒதுக்கப்பெற்ற சிற்றுாராகக் காணப்பெறு கின்றது. பழையாறை வடதளி, மேற்றளி, கீழ்த்தள, தென்தளி என்ற நான்கு கோயில்கள் இருந்தன. வடதளி என்ற கற்கோயில்தான் தென்னாட்டிலுள்ள முதலாவது கற்கோயில்; சோழர் காலத்துக் கற்கோயில். இப்போது இக்கோயில் பாழடைந்த நிலையில் உள்ளது (சிவபாத சுந்தரம், சோ, சேக்கிழார் அடிச்சுவட்டில் பக். 157).

12. பெ. பு. திருநாவுக். (29.4.296)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/238&oldid=634239" இலிருந்து மீள்விக்கப்பட்டது