பக்கம்:நாவுக்கரசர்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxi

பாடுதல்” என்று வள்ளலார் குறிப்பிட்டார். முக்கோணம் பட அமைந்த உணர்வுகள் நேர்படும்போது எய்தும் கவிதை . இலக்கிய - இன்பம், கோதிலா இன்பமாக . குறைவிலா நிறைவாக அமைகின்றது.

  • நான் கலந்து பாடுதல்’ என்னும் உணர்வு நேர்பாடு: பக்திப் பனுவல் அநுபவத்திற்கு மிக மிக இன்றியமையாத தாகும். அவ்வகையில் பக்திப் பனுவல்களைப் பயிலுதலும் பயின்றவற்றைப் பயில்வோர் உளங்கொளப் பகர்தலும் ஒர் அரிய கலையாகும். தமிழில் அந்த அரிய கலை கைவரப் பெற்றவர்களுள் குறிப்பிடத்தக்கவர் தமிழ்ப் பேராசிரியர் டாக்டர். ந. சுப்புரெட்டியார் அவர்கள் ஆவார்கள். பழந் தமிழ் இலக்கியங்களும், ஆழ்வார் அமுதும் அளிக்கும் இன்பத்தில் ஆழங்கால் பட்டு விளங்கும் இரெட்டியார வர்கள் தாவுக்கரசர்’ என்னும் பெயரில் அவர்தம் வாழ்வை யும் வாக்கையும் தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்க முற்பட் டுள்ளது பாராட்டத்தக்க ஒன்றாகும்.

பேராசிரியர் டாக்டர். ந. சுப்புரெட்டியாரவர்கள் பிறந்து மொழி பயின்ற நாளெல்லாம், பிறமொழிக் காழ்ப்பின்றித் தமிழ் நாட்டங்கொண்டு கற்றவராவர் அதனால், உயர் கல்வி நிலையங்களில் தமிழ் கற்பிக்கும் முறையினை” வகுத்து நூலுருவில் வழங்கிய பெருமை அவருக்குண்டா யிற்று. அறிவியல் கற்று அதனைப் பயிற்றும் தொண்டினை மேற்கொண்ட அவர்தம் வாழ்வு, தமிழ் இலக்கியம் பயின்று, சமயக் கல்வியில் மேம்பட்டு, வேத சிகையும் விரிகலையும், மெய்யன்பர் போதமும் போய்த் தீண்டாப் பூரணமாய்” விளங்கும் பரம்பொருளை உணர்ந்து அநுபவிக்கும் அருள் வேட்கைமிக்கு விளங்குகிள் றது. தம் டாக்டர் பட்ட ஆராய்ச்சிக்கு இவர்கள் நம்மாழ்வாரின் அருளிச் செயல் களை ஆய்வுப் பொருளாகக் கொண்டார்கள். அயராத ஆய்வாலும், தனியாத அருள் ஞான வேட்கையாலும், தளராத போதனையாலும் தாம் பெற்ற அருளறுபவ இன்பத்தினைத் தமிழ் வையகம் பெற வேண்டும் என

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/24&oldid=634241" இலிருந்து மீள்விக்கப்பட்டது