பக்கம்:நாவுக்கரசர்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxii

விரும்பி அதனைப் பல அரிய நூல்களாக வெளியிட்டுள் ளார். திருமகள் கேள்வனாகிய பெருமாள் உகந்தருளப் பட்டனவும், ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப் பெற்றனவுமாகிய திவ்விய தேசங்களுக்குத் தமிழ் மக்களை இலக்கிய வழியில் ஆன்மிகப் பயணமாக அழைத்துச் சென்ற பெருமை டாக்டர் இரெட்டியாரவர்களுக்குண்டு.

சைவ வைணவ சமய வேறுபாடு கருதாமல் இருசமய அடியார் பனுவல்களிலும் ஈடுபட்டு இன்புற்றுத் திளைக்கும் மனநலத்தினைத் திரு. இரெட்டியாரவர்கள் வளர்த்துக் கொண்டுள்ளார்கள். தமிழகத்தின், சமயக் காழ்ப்பின்றிச் சைவ வைணவ இலக்கியச் செல்வங்களை ஆரத்துய்த்து அவற்றின் நலங்களைத் தமிழ் மக்களுக்குத் தம் பேச்சாலும் எழுத்தாலும் வரையாது வழங்கிய சிறப்பு இன்று அமரராக விளங்கும் தமிழ்க்கடல், சிவமணி, சிவம்பெருக்கும் சீலர் இராய. சொ. அவர்களைச் சாரும். உழுவலன்பினராய் அவர்களோடு பல ஆண்டுகள் உணர்வு ஒன்றப் பழகிய திரு. இரெட்டியாரவர்கள்பால், சமய வேறுபாடின்றித் திவ்வியப் பிரபந்தப் பாசுரங்களையும், தேவார, திரு வாசகப் பாக்களையும் நலமுணர்ந்து சுவைக்கவும் தாம் சுவைத்தவாறே மற்றவர்களைச் சுவைக்கச் செய்யவும் அமைந்த திறம் குறிப்பிடத்தக்கது. சைவ சமய குரவர் களாகத் திகழும் நால்வர் பெருமக்களின் வரலாற்றையும், அருளிச் செயல்களையும் தம்முடைய பாணியில் தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும் என்று விரும்பிய டாக்டர் இரெட்டியாரவர்களின் வேணவா தம்பிரான்தோழர்’ என்னும் பெயரில் அவ்வரிசையின் முதல் நூலாக வெளிவந் துள்ளது. அதனை அடுத்துத் நாவுக்கரசர் என்னும் பெயரில் இந்நூல் வெளிவருகிறது. எஞ்சிய இரு நூல்களும் விரைவில் அடுத்தடுத்து வெளிவரும் என்னும் நம்பிக்கை உண்டு. ஆழ்வார் பாசுரங்களுக்கு அமைந்துள்ள ஈடு முதலிய வியாக்கியானங்களை நன்கு கற்றுணர்ந்து அநுபவித்ததால், டாக்டர் இரெட்டியாரவர்கள், நாயன்மார்களின் பதிகங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/25&oldid=634252" இலிருந்து மீள்விக்கப்பட்டது