பக்கம்:நாவுக்கரசர்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxiii

களை நோக்கும் கோணத்தில் புதுமையும் பொலிவும் திகழ்கின்றன. இரெட்டியாரவர்கள், அருட்பாசுரங்களைச் சுவைக்கும் பாங்கினை, அச்சுவையினைப் புலப்படுத்தும் பாணியை இந்நூலின் பக்கந்தோறும் காணமுடிகின்றது.

சைவ சமய குரவர் நால்வருள் ஒருவராகிய திருநாவுக்கரசர், உலகில் இதுகாறும் தோன்றியுள்ள இறையருட் செல்வர்களின் வரிசைகளில் முதல்வரிசையில் இடம்பெறத் தக்க மாட்சியுடையவர். அவர், தம் இளமையை, மெய்ப்பொருள் நாட்டங் கொண்டு அதனைத் தேடிக் கண்டடையும் முயற்சியிலும், முதுமையைத் தாம் தேடிக் கண்டு கொண்ட மெய்ப்பொருள் அநுபவ இன்பத் தினை மக்களுக்கு எடுத்துக் கூறி அவர்களை நெறிப் படுத்தும் முயற்சியிலும் கழித்த நடையறாப் பெருந்துறவி. அவருடைய வாழ்க்கை, ஒரு சராசரி மனிதனால் முயன்றடைய முடியாதவாறு, வானத்து மதியமாய், வளர் இமயச் சிமயமாய்க் காணப்படுவதின்றித் தம்முடைய வாழ்க்கையொடு ஒத்தும் உறழ்ந்தும் கண்டு, நெருங்கிச் சென்று போற்றிக் கொள்ளத்தக்க எளிமையும் ஏற்றமும் கொண்டு விளங்குகின்றது. அது மனித சமுதாயத்தை விடுத்து, விலகி விலகிச் செல்வதாக அமையாமல், அதன் பால் நெருங்கி நெருங்கி வந்து, அனைத்து ஆறுதல் அளிக்கும் பாங்கில் அமைந்து திகழ்கின்றது! ஆன்ம ஈடேற்றம் விரும் பும் மக்களுக்கு அவர் வாழ்க்கை, ஒரு கலங்கரை விளக்கம்: அவர்தம் வாக்கு, வழுக்கு நிலத்திற் கிடைத்த ஊன்று கோல் : தென்னக மக்களின் குறிப்பாகத் தமிழ் மக்களின்-ஆன்ம ஞான வெளியீடாகத் திகழும் சித்தாந்த சைவ சமயத்தின் கோட்பாடுகள், சாத்திரம் வடிவம் பெறு வதற்கு உதவியாக அமைந்த கருத்துக் கருக்கள் திருநாவுக்கரசர் திருவாக்கில் . தேவாரத்தில்-இலை மறை காயாக இலங்குகின்றன. சிவபெருமான் சாத்திரமும் தோத்திரமுமாக அமைந்து விளங்கும் இயல்பினைத் திருநாவுக்கரசர் அழகுறக் காட்டியுள்ளார், அவர்தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/26&oldid=634263" இலிருந்து மீள்விக்கப்பட்டது