பக்கம்:நாவுக்கரசர்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 நாவுக்கரசர்

குண்ட ரைக்குண மில்லரைக் கூறையில் மிண்ட ரைத்துரந்த விமலன் (3) எனவும்,

நீதி யைக்கெட கின்றம ணேயுனும் சாதியைக் கெடுமா செய்த சங்கரன் (6) எனவும்,

ஆளுதிா,

ஆயி ரஞ்சம ணும்மழி வாக்கினான் (9) எனவும் வரும் தொடர்களால் இறைவனது செயலாகக் குறிப்பிட்டுள்ளார் ஆளுடைய அடிகள். இவ்வாறு வேந்தன் செயலை இறைவன்மேல் ஏற்றிக் கூறியது மன்னன் மேற் கொண்டு புரியும் முறைசெய்தலாகிய தொழில் இறை வனது தொழிலாகவே கொள்ளப்படும் என்பதும், ஆவதும் அழிவதும் எல்லாம் இறைவனது செயலே என்பதுமாகிய உண்மையினை யறிவுறுத்தும் குறிப்புடையதாதல் தெளி வாகும். -

முறைசெய்து காப்பாற்று மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப்படும்: என்ற வள்ளுவர் கூறும் மரபையும் காண்க.

காவிரியின் இருகரைக் கோயில்கள் : காவிரியின் இரு கரையிலும் அமைந்திருக்கும் திருக்கோயில்களை வழிபட எண்ணுகின்றார் வாகீசர் பெருமான். இதனைச் சேக்கிழார் பெருமான், -

பொங்கு புனலார் பொன்னியினில்”

இரண்டு கரையும் பொருவிடையார்

தங்கும் இடங்கள் புக்கிறைஞ்சித் - தமிழ்மா லைகளும் சாத்திப்போய்

க. குறள்-888 (இறைமாட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/241&oldid=634243" இலிருந்து மீள்விக்கப்பட்டது