பக்கம்:நாவுக்கரசர்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிமையில் தல வழிபாடு 199

எங்கும் கிறைந்த புகழாளர்

ஈறில் தொண்டர் எதிர்கொளச்

செங்கண் விடையார் திருவானைக்

காவின் மருங்கு சென்றணைந்தார். 19

என்று கூறுவார். திருவானைக்கா வருவதற்குமுன் காவிரி யின் இருகரையிலும் உள்ள கோயில்களைச் சேவித்திருக்க வேண்டும் என்பது இப் பாடலின் பொங்குபுனலார்... சாத்திப் போய்’ என்ற தொடரால் அறியக்கிடக்கின்றது. இதனைக் க ரு த் தி ல் கொண்டுதான் பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் இன்னம்பர் முதல் அன்பிலாலந் துறை வரை ஏழு கோயிலைப் பட்டியலிட்டுக் காட்டுவர்.” ஆகவே, இக்கோயில்களைச் சேவித்த பின்னரே நாவுக் கரசர் ஆனைக்காவுக்கு வந்திருக்க வேண்டும் என்று கருது வது சரியான ஊகமே.

ஆகவே வாகீசர் பெருமான் பழையாறை வடதளியி லிருந்து இன்னம்பர் 18 தலத்திற்கு வருகின்றார் என்று கொள்ளலாம்.இத்தலத்துப் பெருமானை அப்பர் பெருமான் நான்கு செந்தமிழ் மாலைகளால் சேவிக்கின்றார் விண் ணவர் மகுடகோடி (4.72) என்ற முதற் குறிப்புடை நேரிசைச் செந்தமிழ் மாலை என்பது முதல் மாலை. இதில்,

அளிமலர்க் கொன்றை துன்றும்

அவிர்சடை யுடையர் போலும் களிமலர்ச் சாய லோடும்

காமனை விழிப்பர் போலும்

16. பெ. பு. திருநாவுக்,300

17. பன்னிரு திருமுறை வரலாறு - இரண்டாம் பகுதி - நாவுக்கரசர் வரலாற்றுத் திருப்பதிகத்தல அட்டவணை பக்.64. *

18. இன்னம்பர் (இன்னம்பூர்): கும்பகோணம் இருப் பூர்தி நிலையத்திலிருந்து 4: கல் தொலைவு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/242&oldid=634244" இலிருந்து மீள்விக்கப்பட்டது