பக்கம்:நாவுக்கரசர்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 நாவுக்கரசர்

வெளிவளர் உருவர் போலும்

வெண்பொடி யணிவர் போலும் எளியவர் அடியற் கென்றும்

இன்னம்பர் ஈச னாரே (8) என்பது இம் மாலையில் தமிழ் மணம் கமழும் ஐந்தாவது வாடா நறுமலர்.

அடுத்த செந்தமிழ் மாலை மன்னு மலைமகள்’ (4.100) என்ற முதற் குறிப்புடைய திருவிருத்தப் பாமாலை. --

போற்றுக் தகையன பொல்லா

முயலகன் கோபப்புன்மை ஆற்றுங் தகையன ஆறு

சமயத் தவரவரைத் தேற்றுந் தகையன தேறிய

தொண்டரைச் செந்நெறிக்கே ஏற்றுக் தகையன இன்னம்ப

ரான்றன் இணையடியே. (7)

என்பது இம்மாலையின் ஏழாவது வாடா நறுமலர், சிவ பெருமானின் திருவடிப் புகழ்ச்சி இப்பதிகத்தின் தனித் தன்மையாகும். கலம்பகம் போன்ற சிற்றிலக்கியங்களில் “புய வகுப்பு, திருவடி வகுப்பு போன்ற உறுப்புகளில் பாடல்கள் அமைவதற்குத் திருமுறை வித்திட்டிருக்கலாம் என்பதற்கு இப்பதிகம் நல்லதொரு சான்று.

இத்திருத்தலத்தீசனுக்குச் சாத்திய மூன்றாவது தமிழ் மாலை என்னிலாரும் (5.21) என்ற முதற்குறிப்புடைய திருக்குறுந்தொகைச் செந்தமிழ் மாலை. இதில்,

என்னி லாரும் எனக்கினி யாரிலை என்னி னும்மினி யானொரு வன்னுளன் என்னு ளேஉயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக் கென்னுளேகிற்கும் இன்னம்பர் ஈசனே. (1)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/243&oldid=634245" இலிருந்து மீள்விக்கப்பட்டது