பக்கம்:நாவுக்கரசர்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிமையில் தல வழிபாடு - 201

தொழுது தூமலர்த் தூவித் துதித்துகின்

றழுது காமுற் றரற்றுகின் றாரையும்

பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்

எழுதுங் கீழ்க்கணக் கின்னம்பர் ஈசனே (8) என்பவை முதலாவது, எட்டாவது தமிழ்மணங் கமழும் நன் மலர்கள்.

நான்காவது நறுந்தமிழ் மாலை ‘அல்லிமலர் (8.89) என்ற முதற்குறிப்புடைய திருத்தாண்டக மாலை.

கருவுற்ற காலத்தே என்னை யாண்டு

கழற்போது தந்தளித்த கள்வர் போலும்: செருவிற் புரமூன்றும் அட்டார் போலும்

தேவர்க்கும் தேவராம் செல்வர் போலும்; மருவிற் பிரியாத மைந்தர் போலும்;

மலரடிகள் நாடி வணங்க லுற்ற இருவர்க் கொருவராய் கின்றார் போலும்;

இன்னம்பர்த் தான்தோன்றி ஈசனாரே, (9) என்பது இப்பதிகத்தின் ஒன்பதாவது தமிழ் மணங் கமழும் நறுமலர்.

நான்கு பதிகங்கள் பெற்ற இத்தலத்து ஈசனைத் திரு நேரிசை, திருவிருத்தம், திருக்குறுந்தொகை, திருத்தாண் டகம் என அப்பரின் அருந்தமிழ் கொஞ்சுகின்ற இனிய பதி கங்கள் இத் தலத்துப் பாமாலைகள். இவற்றில் ஈடுபாடும் பக்தியும் கொஞ்சிக் குலவுவதைக் கண்டு மகிழலாம்.

இன்னம்பர் ஈசனிடம் விடைபெற்றுக் கொண்டு திருப் புறம்பயம்! என்ற திருத்தலத்திற்கு வருகின்றார் நாவேந்தர். வந்தவர் கொடிமாட (6.13) என்று தொடங்கும் செந் தமிழ்த் தாண்டகமாலையால் வழுத்துகின்றார். இதில்,

19. புறம்பயம் (திருப்புறம்பியம்):கும்பகோணத்திலிருந்து 8 கல் தொலைவு. இங்குச் சங்க காலத்தில் பாண்டியனுக்கும் சோழனுக்கும் இடையே நடைபெற்றபோரில் சோழன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/244&oldid=634246" இலிருந்து மீள்விக்கப்பட்டது