பக்கம்:நாவுக்கரசர்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிமையில் தல வழிபாடு 203

றார் வாகீசர் பெருமான். எழுந்தருளியவர் குசையும் அங் கையில் (5.71) என்ற முதற் குறிப்புடைய திருக்குறுந் தொகைச் செந்தமிழ் மாலையால் சேவிக்கின்றார் இத் தலத்து ஈசனை. இதில்,

வந்து கேண்மின் மயல்தீர் மனிதர்காள்! வெந்த நீற்றன் விசயமங் கைப்பிரான் சிந்தை யால்கினை வார்களைச் சிக்கெனப் பந்து வாக்கி உயக்கொளும் காண்மினே. (9)

என்பது ஒன்பதாவது தமிழ்மணங் கமழும் நறுமலர்.எல்லாப் பாடல்களுமே பக்தியதுபவத்தைத் தருபவை.

கவிசயமங்கையின் வேதியனிடம்” விடைபெற்றுக் கொண்டு திருவாலம் பொழில்’ என்ற திருத்தலத்திற்கு வருகின்றார் திருநாவுக்கரசர். கருவாகி (6.86) என்ற முதற்குறிப்பையுடைய செந்தமிழ்த் திருத்தாண்டக மாலை யில் வழிபடுகின்றார் ஆலம் பொழிலானை. -

வரையார்ந்த மடமங்கை பங்கன் தன்னை

வானவர்க்கும் வானவனை மணியை முத்தை அரையார்ந்த புலித்தோல்மேல் அரவ மார்த்த

அம்மானைத் தம்மானை அடியார்க் கென்றும் புரையார்ந்த கோவணத்தெம் புனிதன் தன்னைப் பூந்துருத்தி மேயானனப் புகலூ ரானைத் திரையார்ந்த தென்பரம்பைக் குடியின் மேய

திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே. (5)

பட்டு வரம் பெற்றதைப் (நாவுக் 5.71:8) பாசுரம் கூறும். இன்னம்பர், திருப்புறம்பயம், விசயமங்கை அருகருகே உள்ள திருத்தலங்கள். - -

21. ஆலம்பொழில் : தஞ்சை நகரிலிருந்து 7 கல் தொலைவிலுள்ளது. பேருந்து வழி. சப்த ஸ்தானத் தலங் க்ளுள் திருப்பூந்துருத்தியிலிருந்து 1 கல் தொலைவு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/246&oldid=634248" இலிருந்து மீள்விக்கப்பட்டது