பக்கம்:நாவுக்கரசர்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 - நாவுக்கரசர்

என்பது இத்தமிழ் மாலையின் ஐந்தாவது நறுமலர். இப் பதிகத்தின் பத்தாம் பாடல் சிதைந்துபோயிற்று. ‘திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே என்று ஒவ்வொரு பாடலும் முடிந்து இப்பதிகம் நெஞ்சுக்கு அறிவுறுத்துவ தாக அமைகின்றது.

அடுத்து, திருக்கானூர்” என்ற திருத்தலத்திற்கு வரு கின்றார். வந்தவர் திருவின் நாதனும் (5.76) என்ற திருக் குறுந்தொகைப் பதிகத்தால் வழிபடுகின்றார். இதில்,

பொத்தல் மண்சுவர் பொல்லாக் குரம்பையை மெய்த்தன் என்று வியந்திடல் ஏழைகாள்! சித்தர் பத்தர்கள் சேர்திருக் கானூரில் அத்தன் பாதம் அடைதல் கருமமே. (5) என்பது ஐந்தாம் திருப்பாடல்.

கானூர் அத்தனிடம் விடைபெற்றுக் கொண்டு காட்டுப் பள்ளி: (மேலை) என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். ‘மாட்டுப்பள்ளி’ (5.84) என்று தொடங்கும் திருக்குறுந் தொகைப் பதிகத்தால் காட்டுப்பள்ளி ஈசனை வழுத்து கின்றார். இதில்,

வேலை வென்ற கண்ணாாை விரும்பிகின் சீலங் கெட்டுத் திகையன்மின் பேதைகாள்! காலை யேதொழும் காட்டுப்பள் வளிய்யுறை நீல கண்டனை கித்தல் கினைமினே. (8) ன்பது எட்டாவது பாடல். சதா சிவச்சிந்தனையுடன் Iருக்குமாறு அறிவுறுத்துகின்றார்.

22, திருக்கானூர் (கானுார்): தஞ்சை - திருச்சி இருப் பூர்திப் பாதையில் பூதலூர் என்ற் நிலையத்திலிருந்து 7 கல் தொலைவு. மண்மூடிப் போயிருந்த கோயில் சென்ற நூற் றாண்டில் அகழ்ந்தெடுக்கப் பெற்றது.

23. காட்டுப்பள்ளி (மேலை): லுரர் ப்பர் திேைதே ‘’ ?.* பேருந்து வசதி உண்டு. காவிரியின் தென்கரையிலுள்ள தலம. - - . . ..

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/247&oldid=634249" இலிருந்து மீள்விக்கப்பட்டது