பக்கம்:நாவுக்கரசர்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிமையில் தல வழிபாடு 205.

காட்டுப்பள்ளி ஐயனிடம் விடைபெற்றுக்கொண்டு அன்பில் ஆலந்துறை”சி அடைந்து வானச்சேர் (5.80) என்ற திருக்குறுத் தொகைச் செந்தமிழ்ப் பதிகத்தால் வழிபடு கின்றார். இதில்,

பிறவி மாயப் பிணக்கில் அழுந்தினும் உறவெ லாம்சிங்தித்து உன்னி உகவாதே அறவன் எம்பிரான் அன்பிலா லந்துறை மறவா தேதொழு தேத்தி வணங்குமே. (7) என்பது ஏழாவது பாடல்.

அன்பில் ஆலந்துறை மெய்யனிடம் விடைபெற்றுக் கொண்டு திரு ஆனைக்கா? வருகின்றார். ஆனைக்கா ஈசனை மூன்று பதிகங்களால் வழிபடுகின்றார். கோனைக் காவி (5.31) என்ற முதற் குறிப்புடைய திருக்குறுந் தொகை முதல் பதிகமாகும். இதில்,

ஒழுகு மாடத்துள் ஒன்பது வாய்தலும் கழுகு அரிப்ப தன்முன்னங் கழலடி தொழுது கைகளால் தூமலர் தூவிகின்று அழும வர்க்கன்பன் ஆனைக்கா அண்ணலே. (7) என்பது ஏழாவது பாடல், அடுத்து வழிபடுவது இரண்டு திருத்தாண்டகப் பதிகங்களால். எத்தாயர் (6.62) என்ற முதற் குறிப்புடையது முதல் திருத்தாண்டகம். இதில்,

24. அன்பில் ஆலந்துறை (அன்பில்): இலால்குடியின் கிழக்கே 3 கல் தொலைவிலுள்ளது. பேருந்து வழி. கொள் ளிடத்துக்குத் தென்கர்ையிலுள்ள தலம்.

25. ஆனைக்கா (ஜம்புகேஸ்வரம்): திரு அரங்கம் இருப்பூர்தி நிலையத்திலிருந்து ; கல் தொலைவு. காவிரி கொள்ளிடம் என்ற இரண்டு ஆறுகட்கு இடைப்பட்ட தலம். பஞ்ச பூதத் தலங்களுள் இது நீர் அல்லது ஆப்புத் தலம். மூலத்தான மூர்த்தி இருக்கும் இடம் இரண்டு ஆறு களின் தரைமட்டத்திற்குக் கீழிருப்பதால் எப்போதும் தண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/248&oldid=634250" இலிருந்து மீள்விக்கப்பட்டது