பக்கம்:நாவுக்கரசர்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266: நாவுக்கரசர்

எத்தாயர் எத்தந்தை எச்சுற் றத்தார்

எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார் செத்தால்வந் துதவுவார் ஒருவ ரில்லை

சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர் சித்தாய வேடத்தாய் நீடு பொன்னித்

திருவானைக் காவுடைய செல்வா! என்றன் அத்தா! உன் பொற்பாதம் அடையப் பெற்றால்

அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.(1) என்பது முதல் திருத்தாண்டகம். இதனை அடுத்துத் துதிப்பது முன்னானே’ (6.63) என்ற திருத்தாண்டகத் தால், இதில்,

பொய்யேது மில்லாத மெய்யன் தன்னைப்

புண்ணியனை கண்ணாதார் புரம்நீ றாக எய்தானைச் செய்தவத்தின் மிக்கான் தன்னை

ஏறமரும் பெருமானை இடமான் ஏந்தும் கையானைக் கங்காள வேடத் தானை

கட்டங்கக் கொடியானைக் கனல்போல் மேனிச் செய்யானைத் திருவானைக் காவு ளானைச்

செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே. (5) என்பது ஐந்தாவது திருத்தாண்டகம்.

இத் திருத்தாண்டகப் பதிகத்தில் பாடலின் அடிகள் தோறும், ஆனை ஆனை’ என :மருந்தானை, தாரானை’ கலையானை’, ‘இசையானை’, ‘பார்த்தானை’.எனச் சொல்லோவியமாகத் தீட்டியிருப்பது-அவை திருஆனைக் காவை இடைவிடாது நம் மனத்தில் நிலைபெறச் செய் கின்றது. - ணிர்க் கசிவுள்ளது. ஆற்றில் வெள்ளம் பெருகும்போது ஒயாமல் நீர் இறைத்துக்கொண்டே இருந்தாலன்றி மூலத் தான மூர்த்தியைத் தரிசிக்க முடியாது. நீர் இறைப்பதற் கென்றே எண்ணெய்ப் பொறி உள்ளது. புராணச் சிறப்பு மிக்க தலம். கச்சியப்ப முனிவரால் இயற்றப்பட்ட அருமை யான தலபுராணம் இத் தலத்திற்குண்டு, --

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/249&oldid=634251" இலிருந்து மீள்விக்கப்பட்டது