பக்கம்:நாவுக்கரசர்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 நாவுக்கரசர்

எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்திடம் விடைபெற்று கொண்டு சிராப்பள்ளி வருகின்றார். மட்டுவார் குழலா ளொடு (5.85) என்ற குறுந்தொகைப் பதிகம் பாடி இறைவனை வழிபடுகின்றார். இதில்,

அரிச்சி ராப்பகல் ஐவரால் ஆட்டுண்டு

சுரிச்சி ராதுநெஞ் சேயொன்று சொல்லக்கேள்

திருச்சி ராப்பள்ளி என்றலும் தீவினை

கரிச்சி ராது நடக்கும் நடக்குமே. (3) என்பது மூன்றாவது பாடல். இத்திருப்பதிகத்தில் 4 முதல் 9 வரை செய்யுட்கள் காணப்பெறவில்லை. சில பிரதிகளில் இக் குறுந்தொகைப் பதிகமே இல்லை என்பர் சிவக்கவி மணி.

27. சிராப்பள்ளி (திருச்சிராப்பள்ளி): திருச்சி டவுன் இருப்பூர்தி நிலையத்திலிருந்து ; கல் தொலைவு. நடந்தே வந்து விடலாம். திரிசிரன் என்ற அரக்கன் வழிபட்டதாலும் ஆதி சேடனுக்கும் வாயுதேவனுக்கு ஏற்பட்ட சச்சரவில் வாயுவன்மையால் திருக்கயிலாயத்திலிருந்து தூக்கியெறி யப்பட்ட மூன்று துண்டுகளுள் ஒருதுண்டு இங்குவந்து மலை யாயினமையாலும் தலப்பெயர் ஏற்பட்டதென்பது புராண வரலாறு. காளத்தி, சிராப்பள்ளி, திருக்கோண மலை ஆகிய மூன்றும் இதுபற்றித்தென்கயிலை எனப்படும்.இரத்தினாவதி என்ற வணிகப் பெண்ணின் பிரசவ காலத்தில் இறைவன் தாய்போல் வந்துதவியதால் இறைவன் தாயுமானவன் என்ற பெயரால் வழங்கப்பெறுகின்றான். இந்த அற்புதம் சித்திரைப் பெருவிழாவில் 5-ஆம் திருநாளன்று காலை உற்சவத்தில் நடைபெறுகின்றது. மலையின் உயரம் 273 அடி, ஏறுவதற்கு 417 படிகள் உள்ளன. மலைக்கோயிலுக்கு மேல் உச்சிப்பிள்ளையார் கோயில் உள்ளது. 300 ஆண்டு கட்குமுன் தாயுமான சுவாமிகள் அவதரித்து மூலன் மரபில் வந்த மவுனகுருவினிடம் உபதேசம் பெற்று உருக்கமான பல பாடல்களை அருளிய தலம். எல்லப்ப நாவலர் இயற்றிய செவ்வந்திப் புராணமே இத்தலத்துக்குரிய புராணம். காவிரியின் தென்கரைத்தலம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/251&oldid=634254" இலிருந்து மீள்விக்கப்பட்டது