பக்கம்:நாவுக்கரசர்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிமையில் தல வழிபாடு 209

சிராப்பள்ளிச் செல்வரிடம் விடைபெற்றுக்கொண்டு கற்குடி2 என்ற தலத்திற்கு வருகின்றார். இத்தலத்து எம் பெருமான்மீது மூத்தவனை (6.60) என்ற திருத்தாண்டகச் செந்தமிழ் மாலை பாடிக் கற்குடிக் கற்பகத்தைப் பாடிப் பரவுகின்றார். இதில்,

மண்ணதனில் ஐங்தைமா நீரில் கான்கை

வயங்கெரியில் மூன்றைமா ருதத்தி ரண்டை விண்ணதனில் ஒன்ற விரிக திரைத்

தண்மதியைத் தாரகைகள் தம்மின் மிக்க எண்ணதனில் எழுத்தைஏ ழிசையைக் காமன் எழிலரிய எரியுமிழ்ந்த இமையா நெற்றிக் கண்ணவனைக் கற்குடியில் விழுமி யானைக்

கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே (3) என்பது மூன்றாவது பாடல்.பாடல்கள் யாவும் படிப்போர் உள்ளத்தை உருக்குபவை.

கற்குடிக் கற்பகத்தினிடம் விடைபெற்றுக் கொண்டு திருப்பராய்த் துறை” என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். கரப்பர் காலம் (5.30) என்ற முதற் குறிப்புடைய திருக் குறுந்தொகைச் செந்தமிழ் மாலையால் திருப்பராய்த் துறை மேவிய செல்வனை வழிபடுகின்றார்.

28. கற்குடி (உய்யக் கொண்டான் மலை): திருச்சி டவுன் இருப்பூர்தி நிலையத்திலிருந்து 2 கல் தொலைவு. சிறியதொரு மலைமேல் கோயில் உள்ளது. காவிரியின் தென்கரைத் தலம்.

29. பராய்த்துறை_(திருப்பளாத்துறை): திருப்பராய்த் துறை ரோடு என்ற இருப்பூர்தி நிலையத்திலிருந்து ; கல் தொலைவிலுள்ளது. அகண்ட காவிரியின் தென்கரையி லுள்ள தலம். சித்பவானந்த அடிகளின் இராம கிருஷ்ண தபோவனமும், விவேகாநந்தரின் வித்தியாவனமும் இங் குள்ளன. அற்புதமான கல்விப் பணிகள் செய்து வருவன,

நா-14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/252&oldid=634255" இலிருந்து மீள்விக்கப்பட்டது