பக்கம்:நாவுக்கரசர்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 நாவுக்கரசர்

பாண்டிக் கொடுமுடியிலிருந்து திருபைஞ்ஞ்லியை8ே நோக்கி வருகின்றார். வருகின்றவர் வழியிலே பசியினாலும் தாகத்தினாலும் மிகவும் இளைப்புறுகின்றார். அவரது பசி வருத்தத்தை நீக்கத் திருவுள்ளங்கொண்ட கயிலைநாதன் வழியிலே ஒரு சோலையையும் குளத்தையும் உண்டாக்கி வழிப்பயணம் செய்யும் அந்தணராக வடிவங்கொண்டு கையிற் பொதிசோறு கொண்டு அவ்விடத்தே தங்கியிருக் கின்றார். இதனைச் சேக்கிழார் பெருமான், -

காவும் குளமும் முன் சமைத்துக்

காட்டி வழியோங் கருத்தினால் மேவும் திருநீற் றந்தணராய்

விரும்பும் பொதிசோ றுங்கொண்டு காவின் தனிமன் னவர்க் கெதிரே

கண்ணி யிருந்தார் விண்ணின்மேல் தாவும் புள்ளும் மண்கிழிக்கும்

தனி.ஏ னமும்காண் பரியவர்தாம்,’

என்று காட்டுவர். திருநாவுக்கரசர் அவரையணுகியபோது, அந்தணர் அவரை நோக்கி, “நீர் நீண்ட தூரம் வழி நடந்து வந்தமையால் மிகவும் இளைத்திருக்கின்றீர். யான் கொடுக்கும் பொதி சோற்றை உண்டு, இங்குள்ள தடாகத் தில் தண்ணீர் பருகி இளைப்பாறிச் செல்வீர்’ என்கின் றார். மறையவர் கூறிய இன்னுரையைக் கேட்ட நாவுக் கரசர், இறைவன் திருவருள் இது போலும்’ எனக் கருதி அவர் தந்த பொதி சோற்றினை அருந்திப் பசி தீர்ந்து தண் Eர் பருகித் தளர்வு ஒழிந்திருக்கின்றார். அப்பொழுது

33. பைஞ்ஞ்லி: விருத்தாலம் . திருச்சி இருப்பூர்தி வழியில் பிட்சாண்டார் கோயில் நிலையத்திலிருந்து 3 கல் தொலை விலுள்ளது. அப்பர் சுவாமிகட்கு இறைவன் கட்டமுது தந்த அற்புதத் தலம்.

34. பெ. பு. திருநாவுக். 305

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/255&oldid=634258" இலிருந்து மீள்விக்கப்பட்டது