பக்கம்:நாவுக்கரசர்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிமையில் தல வழிபாடு 218

அந்தண வடிவங் கொண்டு வந்த ஈசன் அப்பரை நோக்கி, :நீர் எங்கே ஏகுகின்றீர்?’ என வினவ, வாகீசரும், திருப் பைஞ்ஞீலிக்குப் போகின்றேன்’ என்கின்றார். அதுகேட்ட அந்தணர் நானும் அங்கேதான் போகின்றேன்’ என்று கூறி இருவரும் திருப்பைஞ்ளுவியை நோக்கி நடக்கின்றனர்.

திருப்பைஞ்ஞ்லியை அணுகியவுடன் அந்தணர் மறைந் தருளுகின்றார். இது கண்டு வியப்புற்ற அப்பர் பெருமான், *ஆடல் புரிந்த பெருமான் அடியேனைப் பொருளாகக் கொண்டு அருள்புரிந்த கருணைத் திறம் இதுவோ?’ என நெஞ்சம் நெக்குருகுகின்றார். கண்ணிர் சொரிகின்றார். நிலமிசை நீடுவீழ்ந்திறைஞ்சுகின்றார். திருக்கோயிலினுட் புகுந்து ‘உடையவர் கோவணம்’ (5.41) எனத் தொடங்கும் திருக்குறுந்தொகைப் பதிகம் பாடி மீண்டும் இறைவனை வழுத்துகின்றார்.

விழுது சூலத்தன் வெண்மழு வாட்படைக் கழுது துஞ்சிருட் காட்டகத் தாடலான் பழுதொன் றின்றிப்பைஞ் ஞ்லிப் பரமனைத் தொழுது செல்பவர் தம்வினை துளியே. (3) என்பது மூன்றாவது பாடல். சில நாட்கள் இத்திருத்தலத் திலேயே தங்கியிருந்து கைத் தொண்டு புரிந்து வருகின்றார். சில நாட்கள் கழித்து வாகீசர் திருவண்ணாமலைக்கு இலக்கு வைத்து இடையில் இறைவன் உறையும் பல மலைகள், நாடுகள், பதிகள் எல்லாவற்றையும் கடக்கின் றார்.கே. பயணம் நடு நாடு வரை தொடர்கின்றது.

35. மலைகள் : திருஈய்ங்கோய் மலை, கொல்லி மலையில் அறப்பள்ளி நயினார் மலை, கஞ்ச மலை, பச்சை மலையில் இருக்கு வேளுர் மலையும்; நாடுகள் கொங்கு நாடு, திருமுனைப்பாடிநாடு; பதிகள் - புலிவலம், திருத் தலையூர், நெற்குன்றம், தோழுர், ஏழுர் முதலானவை என்பர் சிவக்கவிமணி, -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/256&oldid=634259" இலிருந்து மீள்விக்கப்பட்டது