பக்கம்:நாவுக்கரசர்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218. நாவுக்கரசர்

கரவாடும் வன்னெஞ்சர்க்

கரியானைக் கரவார்பால் விரவாடும் பெருமானை

விடையேறும் வித்தகனை அரவாடச் சடைதாழ

அங்கையில் அனலேந்தி இரவாடும் பெருமானை

என்மனத்தே வைத்தேனே. (1) என்பது இப்பதிகத்தின் முதற் பாடல்.

இதனை அடுத்து நம்பனை நகர் (4.44) என்ற திரு நேரிசைச் செந்தமிழ் மாலையால் ஏகம்பனை ஏத்துகின் றார். இதில்,

ஒருமுழம் உள்ள குட்டம்

ஒன்பது துறையு டைத்தாய் அரைமுழம் அதன் அகலம்

அதனில்வாழ் முதலை ஐந்து பெருமுழை வாய்தல் பற்றிக்

கிடந்துநான் பிதற்று கின்றேன் கருமுகில் தவழும் மாடக்

கச்சிஏ கம்ப வீரே. (2) - என்பது இரண்டாவது தமிழ் மணம் கமழும் வாடா நறு மலர். ஒரு முழ ஆழமுள்ள உடலிலுள்ளன. ஒன்பது ஒட்டைகள்: ஐந்து புலன்கள் எனும் வஞ்சக பிடியிலே சிக்கிப் பிதற்றுகின்றேன்’ என்கின்றார். .

இதனை அடுத்தது ஒதுவித்தாய் (4.99) என்ற முதற் குறிப்பினையுடைய திருவிருத்தம். இதில்,

கருவுற்ற நாள்முத லாகவுன்

பாதமே காண்பதற்கு

உருகிற்றென் உள்ளமும் நானும் - கிடந்தலக் தெய்த்தொழிந்தேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/261&oldid=634265" இலிருந்து மீள்விக்கப்பட்டது