பக்கம்:நாவுக்கரசர்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டை நாட்டுத் திருத்தல வழிபாடு 215

திருவொற்றி யூரா திருவால & வாயா திருவாரூரா! ஒருபற் றிலாமையும் கண்டிரங்

காய்கச்சி யேகம்பனே. (5)

என்பது ஆறாவது திருப்பாடல்.

“பண்டுசெய்த’ (5.47) என்ற முதற் குறிப்பினையுடைய திருக்குறுந் தொகைப் பதிகத்தில்,

மூக்கு வாய்செவி கண்ணுட லாகிவங்(து) ஆக்கும் ஐவர்தம் ஆப்பை அவிழ்த்தருள்

நோக்கு வான்மை நோய்வினை வாராமே

காக்கும் நாயகன் கச்சியே கம்பனே. (1)

என்பது ஏழாவது பாடல். பூமேலானும் (5.48) என்ற குறுந் தொகைப் பதிகமும் கச்சி ஏகம்பனைப் பற்றியதே. இதில்,

பொறிப்பு லன்களைப் போக்கறுத் துள்ளத்தை நெறிப்படுத்து கினைந்தவர் சிங்தையுள் அறிப்பு றும்மமு தாயவன் ஏகம்பம் குறிப்பி னாற்சென்று கூடித் தொழுதுமே. (4)

என்பது நான்காவது திருப்பாடல்.

இதனையடுத்து திருக்கச்சி மயானம்’ என்ற தலத்தை

வழிபடுகின்றார். இந்த இரண்டு தகளிகளிலும் அப்பர் பெருமான் கைத்தொண்டு செய்கின்றார்.

4. திருக்கச்சி மயானம் - இது தேவார வைப்புத் தலம். இது காஞ்சியில் திருவேகம்பம் திருக்கோயிலுக்குள் கொடிநிலையின் அருகே அமைந்த சந்நிதியாகும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/262&oldid=634266" இலிருந்து மீள்விக்கப்பட்டது