பக்கம்:நாவுக்கரசர்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டை நாட்டுத் திருத்தல வழிபாடு 221

செந்தமிழ் மாலையால் மாற்பேறுடையானின் மலரடியை வழுத்துகின்றார். -

கருடத் தனிப்பாகன் காண்டற்

கரியன் காதல்செய்யில் குருடர்க்கு முன்னே குடிகொண்

டிருப்பன கோலமல்கு செருடக் கடிமலர்ச் செல்விதன் செங்கம லக்கரத்தால் வருடச் சிவப்பன மாற்பே

றுடையான் மலரடியே. (2)

என்பது இரண்டாவது வாடா நறுமலர். இப்பதிகத்தில் முதலிரண்டு பாடல்களே உள்ளன.

அடுத்தது பொருமாற்றின் படை’ (5.59) என்ற முதற் குறிப்புடைய திருக் குறுந்தொகைப் பதிகமாகும். இதில்,

பண்டை வல்வினை பற்றறுக் கும்வகை உண்டு சொல்லுவன் கேண்மின்: ஒளிகிளர் வண்டு சேர்பொழில் சூழ்திரு மாற்பேறு. கண்டு கைதொழத் தீருங் கவலையே. (6)

என்பது ஆறாவது பாடல். இதற்கடுத்த ‘ஏதுமொன்றும்’ (5.60) என்னும் திருக்குறுந்தொகைப் பதிகத்தில்,

இருந்து சொல்லுவன் கேண்மின்கள் ஏழைகாள்! அருந்த வந்தரும் அஞ்செழுத் தோதினால் பொருந்து நோய்பிணி போகத் துரப்பதோர் மருந்து மாகுவர் மன்னுமாற் பேறரே (4) என்பது நான்காவது பாடல்.

பாரானை (6.80) என்ற திருத்தாண்டகச் செந்தமிழ் மாலை அற்புதமானது. இதனாலும் மாற்பேறுடையா னைப் போற்றுகின்றார். இதில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/264&oldid=634268" இலிருந்து மீள்விக்கப்பட்டது