பக்கம்:நாவுக்கரசர்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 ந்ாவுக்கரசர்

பிறப்பானைப் பிறவாத பெருமை யானைப்

பெரியானை அரியானை பெண் ஆண் ஆய நிறத்தானை கின்மலனை கினையா தாரை

கினையானை கினைவோரை கினைவோன் தன்னை அறத்தானை அறவோனை ஐயன் தன்னை

அண்ணல்தனை கண்ணரிய அமர ரேத்தும் திறத்தானைத் திகழொளியைத் திருமாற் பேற்றெஞ்

செம்பவளக் குன்றினைச் சென்றடைந்தேன்நானே.(7) என்பது தமிழ்மணங் கமழும் ஏழாவது வாடா நறுமலர். பாடல்கள் யாவும் பாடி அநுபவிக்க வேண்டியவை.

இதன் பின்னர் மீண்டும் திருக்கச்சிக்கு எழுந்தருள் கின்றார். (இஃது இரண்டாம் முறை வருகை). இரண்டு திருத்தாண்டக மாலைகளைக் கச்சி ஏகம்பனுக்கு சூட்டி மகிழ்கின்றார் கூற்றுவன் காண்’ (6.64) என்ற முதற் குறிப்புடையது முதல் செந்தமிழ் மாலை. இதில்,

பரந்தவன்காண்; பல்லுயிர் களாகி எங்கும்

பணிக்தெழுவார் பாவமும் வினையும் போகத் துரந்தவன்காண்; தூமலரங் கண்ணி யான்காண்; தோற்ற நிலையிறுதிப் பொருளாய் வந்த மருந்தவன்காண்; வையங்கள் பொறைதீர்ப் பான்காண்;

மலர்தூவி நினைக்தெழுவார் உள்ளம் நீங்கா திருந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி

ஏகம்பன்காண்; அவனென் எண்ணத் தானே. (2) என்பது இரண்டாவது தமிழ்மணம் கமழும் வாடா நறுமலர்.

அடுத்த செந்தமிழ் மாலை உரித்தவன் (6.65) என்று தொடங்குவது. இதில், -

ஆய்ந்தவன்காண்; அருமறையோ டங்கம் ஆறும்

அணிந்தவன் காண் ஆடரவவோ டென்பு மாமை;

காய்ந்தவன் காண் கண்ணழலாற் காமன் ஆகம்:

கனன்றெழுந்த காலனுடல் பொடியாய் வீழப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/265&oldid=634269" இலிருந்து மீள்விக்கப்பட்டது