பக்கம்:நாவுக்கரசர்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டை நாட்டுத் திருத்தல வழிபாடு 223

பாய்ந்தவன்காண்; பண்டுபல சருகால் பந்தர்

பயின்றநூற் சிலந்திக்குப் பாராள் செல்வம்

ஈந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி

ஏகம்பன்காண்; அவனென் எண்ணத்தானே. (6)

என்பது ஆறாவது வாடா நறுமலர். இரண்டு பதிகங்களை யும் மனம் உருகிப் பாடினால் காண், காண்’ என்ற ஓசை சிந்தையில் ஒலித்துக்கண்ணிரை ஆறாகப் பெருகச்செய்யும், இவ்விரண்டு பாமாலைகளும் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காண்! அவன் எண்ணத்தானே’ என்று முடிவு பெறும் மகுடங்களையுடையவை. ஏகம்பனைப் படிப்போர் சிந்தையில் நிலைநிறுத்துபவை.

பின்னர் தொண்டை நாட்டிலுள்ள பல தலங்களையும் சேவிக்க விரும்பி முதலில் திருக்கழுக்குன்றம் வருகின்றார். இங்குள்ள நிருத்தனார் கழல் வணங்கி. மூவிலை வேல்

7. கழுக்குன்றம் (திருக்கழுக்குன்றம்): செங்கல்பட்டி லிருந்து 9 கல் தொலைவு. வடநாட்டார் பட்சி தீர்த்தம்” என்று கூறுவர். செங்கல்பட்டிலிருந்தும் காஞ்சியிலிருந்தும் பேருந்துமூலம் வரலாம். வேதமே மலையாதலின் வேதகிரி வேதாசலம் என்ற பெயர்களும் உண்டு. மலையுச்சியில் அருமையாகக் குடைந்தெடுக்கப் பெற்றது. இக்கோயில். கருவறைச் சுவர்களில் பல அழகிய சிவபராக்கிம வரலாறு கள் செதுக்கப்பெற்றுள்ளன. பாடல் பெற்ற தலங்களுள் இங்கும் திருப்பரங்குன்றத்திலுமே பூசிக்கப்பெறும் குகைக் உள்ளன. கோயிலுக்கு வடபுறம் ஒரு கற் பாறையின்மீது உச்சி வேளையில் இரண்டு கழுகுகட்கு நெய்யும் சருக்கரைப் பொங்கலும் பட்சி பண்டார்ம்” என் பவரால் நாடோறும் அளிக்கப்பெறுகின்றது. இராமாயண் காலத்திலிருந்த சம்பாதி, சடாயு என்ற இரு கழுகுகள் கழுக்குன்றத் துச்சியானை-வழிபட்டன என்றும், இக் கழுகு ‘கள்ன் வழித் தோன்றல்களே இப்போது வருவன என்றும் கூறப்பெறுகின்றது. இத் தலத்திற்குப் 12 கல் தொலைவில் திருப்போரூர் என்ற முருகன் தலமும் 9 கல் தொலைவில் மாமல்லபுரம் என்ற வைணவத் தலமும் உள்ளன. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/266&oldid=634270" இலிருந்து மீள்விக்கப்பட்டது