பக்கம்:நாவுக்கரசர்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 - ாவுக்கரசர்

அன்றரைக் கண்ணும் கொடுத்து

உமையாளையும் பாகம் வைத்த ஒன்றரைக் கண்ணன் கண்டீர்

ஒற்றி யூருறை உத்தமனே. (7) என்ற இத் திருப்பாடல் ஏழாவது வாடா நறுமலர், இந்த மாலையின், -

செற்றுக் களிற்றுரி கொள்கின்ற

ஞான்று செருவெண் கொம்பொன்(று) இற்றுக் கிடந்தது போலும்

இளம்பி றையாம் பதனைச் சுற்றிக் கிடந்தது கிம்புரி

போலச் சுடர்இ மைக்கும் கெற்றிக்கண் மற்ததன் முத்தொக்

குமால் ஒற்றியூ ரனுக்கே (1) என்ற முதற் பாடலில் சிவபெருமான் காட்சி'யை அற்புத மாகச் சித்திரித்திருப்பது பாட்டின்பத்தையும் பக்தி உணர்ச்சியையும் தருவதாக அமைகின்றது. “ஒற்றியூரும்’ (5.24) எனத் தொடங்கும். பதிகத்தின் முதற் பாடலே சொல் நயம் பொருள் நயம் செறிந்து காணப்படுகிறது.

ஒற்றி யூரும் ஒளிமதி பாம்பினை ஒற்றி ஆருமப் பாம்பும் அதனையே ஒற்றி யூர ஒருசடை வைத்தவன் ஒற்றி யூர்தொழ நம்வினை ஒயுமே. (1) என்பது முதற் பாடல். ஒற்றியூர் பற்றிய அப்பர் பெருமா னின் பதிகங்கள் யாவும் உள்ளத்தை உருக்குபவை. - ஒற்றியூர்ப் பெருமானிடம் விடைபெற்றுக் கொண்டு திருப்பாசூர்’ வருகின்றார் வாகீசர் பெருமான். இங்குக்

12. பாசூர் (திருப்பாச்சூர்): திருவள்ளுரிலிருந்து 44 கல் தொலைவிலுள்ளது. . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/271&oldid=634276" இலிருந்து மீள்விக்கப்பட்டது