பக்கம்:நாவுக்கரசர்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டை நாட்டுத் திருத்தல வழிபாடு 229

கோயில் கொண்டிருக்கும் புரமூன்றும் எரித்தருளிய பிஞ்ஞகனை முந்தி மூவெயில் எய்த முதல்வனார் (5.25) என்று தொடங்கும் குறுந்தொகைப் பதிகம் பாடிப் போற்று கின்றார்.

முந்தி மூவெயில் எய்த முதல்வனார் சிந்திப் பார்வினை தீர்த்திடுஞ் செல்வனார் அந்திக் கோன்தனக் கேயருள் செய்தவர் பந்திச் செஞ்சடைப் பாகு ரடிகளே. (1) என்பது பதிகத்தின் முதற் பாடலாகும். இத்திருத்தலத்து இறைவன் மீது விண்ணாகி கிலனாகி” (6.83) என்ற முதற் குறிப்பினையுடைய திருத்தாண்டகமும் பாடியுள்ளார்.

வேடனாய் விசயன்தன் வியப்பைக் காண்பான்

வில்பிடித்துக் கொம்புடைய ஏனத் தின்பின் கூடினார் உமையவளும் காலம் கொள்ளக்

கொலைப் பகழி உடன்கோத்துக் கோரப் பூசல் ஆடினார் பெருங்கூத்துக் காளி கான

அருமறையோ டாறங்கம் ஆய்ந்து கொண்டு பாடினார் கால்வேதம் பாசூர் மேய w

பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே. (5) என்பது இப்பதிகத்தின் ஐந்தாவது தாண்டகம். இப்பதிகத்திலுள்ள தாண்டகச் செய்யுட்கள் படிப்போர் உள்ளத்தை உருக்குபவை. -

பாசூர் பெருமானிடம் விடைபெற்றுக் கொண்டு திரு வாலங்காட்டிற்கு வருகின்றார். ஒன்றாவுலகனைத்தும்’

13. ஆலங்காடு (திருவாலங்காடு): சென்னை - அரக் கோணம் இருப்பூர்தி வ்ழியில் திருவால்ங்காடு நிலையத்தி விருந்து 3 கல் தொலைவிலுள்ளது. இத்திருத்தலம் கங்கை கொண்ட சோழன் பழையனுரர் கிராமத்தை ஆலங் காடுடை மகாதேவர்க்குத் தானமாகக் கொடுத்த செய்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/272&oldid=634278" இலிருந்து மீள்விக்கப்பட்டது