பக்கம்:நாவுக்கரசர்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 நாவுக்கரசர்

(6.18) என்ற முதற் குறிப்புடைய தாண்டகப் பதிகம் பாடி இறைவனை ஏத்துகின்றார் நாவுக்கரசர். -

அல்லும் பகலுமாய் கின்றார் தாமே,

அந்தியும் சந்தியும் ஆனார் தாமே, சொல்லும் பொருளெலாம் ஆனார் தாமே,

தோத்திரமும் சாத்திரமும் ஆனார் தாமே, பல்லுரைக்கும் பாவெலாம் ஆனார் தாமே?

பழனை பதியாக உடையார் தாமே; செல்லும் நெறிகாட்ட வல்லார் தாமே;

திருவாலங் காடுறையும் செல்வர் தாமே. (5) என்பது இத்தாண்டகப் பதிகத்தின் ஐந்தாம் தாண்டக மாகும்.

இந்த அற்புதத் திருத்தலத்தைச் சாராது பல நாட்கள் போக்கினதற்கு மிகக் கவன்றுரைக்கும் தாண்டகங்கள் நெஞ்சை உருக்குவனவாகும். இத்தாண்டகம் தொண் டர்க்குத் தூநெறியாய்’ (6.79) என்று தொடங்குவது.

சிவனாகித் திசைமுகனாய்த் திருமா லாகிச்

செழுஞ்சுடராய்த் தீயாகி நீரு மாகிப் புவனாகிப் புவனங்கள் அனைத்து மாகிப்

பொன்னாகி மணியாகி முத்து மாகிப்

இவ்வூர்ச் செப்பேடுகளில் விவரிக்கப் பெற்றுள்ளது. இத் தலத்துக் கோயில் நிலங்களிலிருந்து கள் இறக்குதல் இல்லை என்பது அக்கால வழக்கு. காளியோடு தாண்டவம் புரிந்த சிவபெருமான் அவளை ஊர்த்துவத் தாண்டவமாடித்” தோற்கடித்த அருமைத் தலம். காரைக்கால் அம்மையார் தலையால் நடந்து வந்த அற்புதத் தலம். கூத்தபிரான் சபைகள் ஐந்தனுள் இது இரத்தினசபை அல்லது மணி மன்று எனப்படும். பழையனூர் ஆலங்காட்டிற்கு கல் தொலைவிலுள்ளது. இங்குக் காரைக்கால் அம்மையார் கோயில் ஒன்று உண்டு. ஊர்த்துவத் தாண்டவமூர்த்தி பங்குனி உத்திரம், மார்கழித் திருவாதிரை ஆகிய இரண்டு நாட்களில் திருவிதிக்கெழுந்தருளிப் பழையனூர் சென்று வருவாா, ... “ - .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/273&oldid=634279" இலிருந்து மீள்விக்கப்பட்டது