பக்கம்:நாவுக்கரசர்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டை நாட்டுத் திருத்தல் வழிபாடு 231

பவனாகிப் பவனங்கள் அனைத்து மாகிப்

பசுவேறித் திரிவானோர் பவனாய் கின்ற தவனாய தலையாலங் காடன் தன்னைச்

சாராதே சாலநாள் போக்கினேனே. (4) என்பது நான்காவது தாண்டகம். இப்பதிகம் முழுவதும் படித்துப் படித்துச் சிவா.நுபவம் பெற வேண்டும். ‘வெள்ள நீர்ச்சடையர்’ (4.68) என்ற முதற் குறிப்புடைய திரு நேரிசைச் செந்தமிழ் மாலையும் படிப்போரிடம் சிவாது பவம் எழச் செய்யவல்லது.

கண்ணினாற் காம வேளைக்

கனலெழ விழிப்பர் போலும்; எண்ணிலார் புரங்கள் மூன்றும்

எரியுணச் சிரிப்பர் போலும்; பண்ணினார் முழவம் ஓவாப் - பைம்பொழில் பழகை மேய

அண்ணலார் எம்மை ஆளும்

ஆலங்காட் டடிக ளாரே. (3) என்பது மாலையிலுள்ள மணம் மிக்க மூன்றாவது மல ராகும்,

திருவாலங்காட்டு இறைவனிடம் விடைபெற்றுக் கொண்டு திருக்காரிக்கரை 14 என்னும் தலத்தையடைகின்

14. காரிக்கரை:தொண்டை நாட்டுத் தலம்; இது வைப் புத்தலம். மூவர் தேவாரப் பதிகங்களிலும் தமக்கெனத் தனித்திருப்பதிகத்தைப் பெறாமல் பிற தலப்பதிகங்களிலும் பொதுப் பதிகங்களிலும் பெயரளவில்குறித்துப் போற்றப் பற்ற தலங்கள் தேவார வைப்புத் தலங்கள்’ என வழங்கப் பெறும். காரிக்கரையைச் சேக்கிழார் திருக் காரிக்கரை’ எனக் குறிப்பர் (பெ. பு. திருநாவுக்-343) கடங்களுர் திருக் காரிக்கரை கயில்ாயம் (சுந்தரர் 7.31:3 காண்க). இது சென்னையிலிருந்து திருப்பதிக்குப் போகும் பேருந்து வழி யிலுள்ள நாகலாபுரம் என்ற ஊரிலிருந்து 1 கல் தொலை விலுள்ள இராமகிரி என்ற ஊராகும். காரி (காலேறு) நதி யின் கரையிலுளளமையால் இப் பெயர் பெற்றது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/274&oldid=634280" இலிருந்து மீள்விக்கப்பட்டது