பக்கம்:நாவுக்கரசர்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 நாவுக்கரசர் நார். இத்திருத்தலப் பெருமானை வழிபட்டுத் திருக் காளத்தியை அடைகின்றார் அடியார் சூட்டத்துடன், பொன் முகலித் திருநதியாகத் தூய தீர்த்தத்தில் திரு முழுக் காடி திருக்காளத்தி ழொய்வரையின் தாழ்வரையில்’ சென்னியுறப் பணிந்தெழுகின்றார். மலையின் மீதேறிக் குடுமித்தேவரைப் பணிந்து காளத்தி மலைக் கொழுந்தை, வேதமொழி மூலத்தை’ விற்றுணொன்றில்லாத (6.81) என்ற முதற் குறிப்புடைய தாண்டகப் பதிகத்தால் வழிபடு கின்றார். இரண்டு பாடல்களில் ஆழங்கால் படுவோம்.

நாரணன்காண்; நான்முகன்காண்; நால்வே தன்காண்;

ஞானப்பெருங்க டற்கோர் நாவாய் அன்ன பூரணன்காண்; புண்ணியன்காண்; புராணன்தான் காண்;

புரிசடைமேல் புனலேற்ற புனிதன் தான்காண்; சாரணன் காண்; சந்திரன்காண்; கதிரோன் தான்காண்;

தன்மைக்கண் தானேகாண்; தக்கோர்க் கெல்லாம் காரணன் காண்; காளத்தி காணப் பட்ட

கணநாதன் காண்அவனென் கண்ணு ளானே. (3)

15. காளத்தி (ஸ்ரீகாள ஹஸ்தி): காட்டுப்பாடி-ரேணி குண்டா-கூடுர் இருப்பூர்தி வழியில் காளஹஸ்தி நிலையத்தி லிருந்து கல் தொலைவு. சென்னையிலிருந்து திருப்பதி செல்லும் சில விரைவுப் பேருந்துகள் இவ்வூர் வழியாகச் செல்லுகின்றன; இவற்றில் செல்லுவதே எளிது. சிலந்தி (=பூர்), பாம்பு (=காளம்), யானை (தவறஸ்தி) ஆகிய மூன்றும் வழிபட்டு முக்தி அடைந்ததிருத்தலும். பஞ்சபூத தலங்களுள இது வாயு தலம். சுயம்புலிங்கம். நீண்ட பல செங்குத்தான் உட்குழிந்த குடைவுகள் நிரம்பிய திருமேனி. தருவறையின் வாயிலில் கண்ணப்பர் காட்சி தருகின்றார். சிவராத்திரி விழா புகழ் பெற்றது. தேவார முதலிகள் மூவரும் வழிபட்டதலம்(பெ. பு.). தென் கயிலாயம் எனக் கூறப்படும் தலங்களுள் இத்தலமும் ஒன்று, .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/275&oldid=634281" இலிருந்து மீள்விக்கப்பட்டது