பக்கம்:நாவுக்கரசர்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 15. திருக்கயிலாயத் திருப்பயணம்

கயிலைக் கோலம் காண விரும்பிய திருநாவுக்கரசர் காளத்திப்பெருமானை வணங்கிப்போற்றித் தம் வடதிசை பயணத்தைத் தொடங்குகின்றார். மலை, காடு, ஆறு, நாடு ழுதலியவற்றைக் கடந்து திருப்பருப்பதம் அடைகின்றார். கன்றினார்’ (4.58) என்ற முதற் குறிப்புடைய திரு நேரிசைச் செந்தமிழ் மாலையால் பருப்பதத் திறைவனை வழிபடுகின்றார். இதில்,

கையராய்க் கபால மேந்திக்

காமனைக் கண்ணாற் காய்ந்து மெய்யராய் மேனி தன்மேல்

விளங்குவெண் ணிறு பூசி உய்வரா யுள்கு வார்கட்

குவகைகள் பலவும் செய்து பையரா அரையி லார்த்துப்

பருப்பதம் நோக்கி னாரே. (5)

என்பது தமிழ் மணம் கமழும் ஐந்தாவது வாடா நறுமலர். தெலுங்கு நாட்டில் பாடிய பதிகம் இது.

1. திருப்புருப்பதம் (ரீசைலம்) : சென்னை-குண்டக் கல்.பம்பாய் இருப்பூர்தி வழியில் குண்டக்கல் செல்ல வேண்டும். அங்கு வண்டிமாறி பெஜவாடா - நந்தியால் . குண்டக்கல் இருப்பூர்தி வழியில் நந்தியாவை அடைதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/277&oldid=634283" இலிருந்து மீள்விக்கப்பட்டது