பக்கம்:நாவுக்கரசர்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கயிலாயத் திருப்பயணம் 235

ப்ருப்பதத்தினின்றும் பயணம் செய்து கயிலையை மனத்தில் நிறுத்தி இரு பக்கங்களிலும் அடியவர்கள் தொடர்ந்துவர தெலுங்கு நாட்டினைக் கடந்து கன்னட நாட்டினை அடைகின்றார். கன்னட நாட்டில் கோகரணம்? (கோகரண்) என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். ஒரு பதிகத்தால் கோகரணம் மன்னிய பெருமானை வழிபடு கின்றார். இப்பதிகம் சந்திரனுந் தண்புனலும் (6.49) என்ற முதற் குறிப்புடைய திருத் தாண்டகமாகும். இதில்,

பின்னுசடை மேற்பிறை சூடி னான்காண்;

பேரருளன் காண்; பிறப்பொன் றில்லா தான்காண்; முன்னி யுலகுக்கு முன்னா னான்காண்;

மூஎயிலுஞ் செற்றுகந்த முதல்வன் றான்காண்; இன்னவுரு வென்றறி வொண்ணா தான்காண்; ஏழ்கடலும் ஏழுலகு மாயி னான்காண்; மன்னும் மடங்தையோர் பாகத் தான்காண்;

மாகடல்சூழ் கோகரணம் மன்னினானே. (8) என்பது எட்டாவது பாடல். கன்னட நாட்டில் பாடிய பதிகம் இது. பின்னர்க் கன்னட நாட்டின் எல்லையைக்

வேண்டும். அங்கிருந்து ஆத்மகூர் 30 கல் தொலைவு. பேருந்துப் பயணம். அங்கிருந்து காட்டுவழியாக 20 கல் மகிழ்வுந்து அல்லது மாட்டு வண்டியில் செல்லவேண்டும். பெத்தசெருவு என்ற ஏரிக்கரை சேர்ந்து அங்கிருந்து 10 கல் தொலைவு மலையேறிச் சென்றால் இத்தலத்தை அடைய லாம். இப்பொழுது திருப்பதியிலிருந்து சிறப்புப் பேருந்து விடப்படுகின்றது; அதில் செல்வது எளிது. மலையின் உயரம் கடல் மட்டத்திற்குமேல் 1563 அடி உயரம் ஆகும். சம்பந்த ரும் சுந்தரரும் காளத்தியிலிருந்தே பதிகம் அருளினர். அப்பர் அடிகள் நேரில் சென்று சேவித்தார். - 2. கோகரணம் : துளு நாட்டிலுள்ள தலம். ஹாப்ளி என்ற இருப்பூர்தி நிலையத்திலிருந்து 90 கல் தொலைவி லுள்ளது. பேருந்து வசதி உண்டு. வழி நெடுகத் தேக்குமரக் காடுகளும் மலைச் சரிவுகளும், இயற்கை வனப்பு மிக்க சோல்ைகளும் உள்ளன. தலம் மேற்குக் கடற்கரையி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/278&oldid=634284" இலிருந்து மீள்விக்கப்பட்டது