பக்கம்:நாவுக்கரசர்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 - நாவுக்கரசர்

கடந்து இடையிலுள்ள காடுகள், நதித்துறைகள்? நீண்ட மலை வழிகள், நலம் நிறைந்த காடுகள் ஆகியவற்றை யெல்லாம் கடந்து கதிரவன் தவழ்கின்ற சோலைகளை யுடைய மாளவநாட்டை அடைகின்றார். இவ்வாறு செல் கின்றவர் அரிய பாலை நிலங்களைக் கடந்து சென்று இலாடம், மத்திம பைதிரம் (மத்தியப் பிரதேசம்) ஆகிய நாடுகளைக் கடந்து கங்கையாறு வளம் சுரக்கும் வாரணாசி (காசி)யை அடைகின்றார். வாரணாசி விசுவ நாதரை வழிபட்டு தம்முடன் வந்த அடியார்களை அங்கேயே தங்கும்படிப் பணித்துத் தாம்மட்டிலும் கல் நிறைந்த கொடிய மலைக்காடுகளில் நடந்து செல்கின்றார். மக்கள் நடமாட்டம் இல்லாத வானுற வோங்கிய காடு களிலும் இலை, கிழங்கு, கனி முதலியவற்றை உட்கொள் வதையும் தவிர்த்து இரவு பகலாக இடைவிடாது நடந்து செல்கின்றார்.

லுள்ளது. கர்நாடக மாநிலம் வட கன்னட மாவட்டத்தி லுள்ளது. கயிலையிலிருந்து இராவணன் ஒரு சிவலிங்கம் கொண்டு வந்தான். மாலைக்கடன் முடித்தற் பொருட்டுத் தரையில் வைக்கக்கூடாதென்று நினைத்தபோது,விநாயகர் ஒரு சிறுவன்போல் எதிர்வந்து தமது கையில் சிவலிங் கத்தை ஏற்று, மீண்டும் விரைவில் பெற்றுக் கொள்ளா விடில் தரையில் வைத்து விடுவதாகச் சொன்னார். சிறிது நேரமானதும் தரையில் வைத்து விட்டார், மாலைக்கடன் முடிந்ததும் இராவணன் எடுக்க முயன்றான். பெயர்க்க முடியவில்லை. இஃது இன்று ஒரு பசுவின் காது துணியளவே தெரிகின்றபடியால் தலப் பெயர் கோகரணம் ஆயிற்று. நாமே இலிங்கத்தைத் தொட்டு வழிபடலாம். விநாயகர் திருவுருவம் நின்ற கோலமாக அழகு நிரம்பியுள்ளது, மகா சிவராத்திரியன்று திருத்தேர். பெருங்கூட்டம். இலட்சக் கணக்கான மக்கள் சேவிக்கின்றனர். -

3. கிருஷ்ணை, கோதாவரி, மகாநதி முதலிய நதி களும் அவற்றின் துறைகளும். - .

4. பெ. பு: திருநாவுக் (349.354)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/279&oldid=634285" இலிருந்து மீள்விக்கப்பட்டது