பக்கம்:நாவுக்கரசர்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கயிலாயத் திருப்பயணம் - 287

இவ்வாறு காரிருளில் கடந்து செல்லுகின்ற அப்பர் பெருமானிடம் கொடிய விலங்குகள் தமது தீச் செயல் களைச் செய்ய அஞ்சுகின்றன; நஞ்சினை உமிழும் நாகப் பாம்புகள் அவற்றின் படங்களில் உள்ள மணிகளை ஏந்தி விளக்கொளி செய்கின்றன. தேவர்களும் தனியே வருவ தற்கு அஞ்சும்படியான கொடிய பாலை நிலத்தில் நடந்து செல்லுகின்றார் அப்பர் பெருமான். தசை ஒழியக், கால் தேயத் தாண்டக வேந்தர் இரவு பகல் எல்லாம் நடக்கின் றார்: தாமரைப் பாதத்தின் தசைகள் எல்லாம் தேய்ந்த நிலையிலும் சொற்றுணை வேதியனை, சோதிவான வனை மறக்கவில்லை; வெள்ளி மால்வரை விரிசடையப் பனை மறக்காத சிந்தனையுடன் செல்கின்றார். கால்கள் தேய்ந்தாலும், கயிலை பெருமானைக் காணவேண்டும் என்னும் பேரார்வத்தால் தமது இரண்டு கைகளையும் ஆதரவாகக்கொண்டு தாவித் தாவி ஊர்கின்றார். மேலும் ஆர்வம் மிகுதலால் பருக்கைக் கற்கள் நிரம்பிய அவ் வழியில் மார்பினால் நகர்ந்து செல்லுகின்றார். வழியின் பரற்கற் களில் கனலின் வெப்பம் தீப்போலச் சுடுகின்றது. கயிலை வேட்கை அப்பர் பெருமானை மார்பினால் உந்தச் செய் கின்றது.?

மார்புத் தசைகளும் உந்தி உந்திக் கெட்டு விடுகின்றன; விலா எலும்புகளும் முறிந்து விடுகின்றன; அடைதற்கரிய குறிக்கோள் ஊறிப் பதிந்துள்ள உறுதிமிக்க நாவுக்கரச ரின் நெஞ்சத்தில் நேசம் மட்டிலும் குறையவில்லை. ஊன் கெட்டு உடல் கெட்டுப் போயினும் உயிர் செலுத்துகின்ற ஆர்வம் மிகுதியால் அந்த அடவிகளில் புரண்டு புரண்டு செல்லுகின்றார் செம்மை நெறியில் உயர்ந்த நாவேந்தர்.8 அங்கமும் உடலும் அழிந்து தேய்ந்தாலும் மன உறுதி சொற்கோவிடம் வலுத்துள்ளது. சிவனது சேவடி

5. டிெ (355-358) 6. டிெ (359)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/280&oldid=634287" இலிருந்து மீள்விக்கப்பட்டது