பக்கம்:நாவுக்கரசர்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 நாவுக்கரசர்

நினைந்த சிந்தனை மட்டிலுமே கயிலைநாதன்பால் செலுத்த முடிகின்றது. வாழ்த்த வாயும், நினைக்க மட நெஞ்சும் மட்டிலும் இப்போது வாகீசரிடம் காணமுடி கின்றது.?

மன உறுதி இருந்தாலும் உடல்வன்மை செயற்பட வில்லை. மெல்ல நகர்வதற்கு முயன்றும் அது கூடாமை யால் சொல்வேந்தர் அவ்வழியிலேயே செயலற்றுத் தங்கு கின்றார். அடியார்களின் ஆசையை நிறைவேற்றுவதற்குத் தயங்காத கயிலைநாதன் நாவேந்தர் செல்லும் வழியில் ஒரு தடாகத்தை உண்டாக்கித் தாமும் வற்கலையாடையும் சடைமுடியும் உடைய ஒரு முனிவர் வடிவத்துடன் அவர்க்கு முன்வந்து நிற்கின்றார். நின்றவர் நீர் எங்குச் செல் கின்றீர்?’ என்று கேட்கின்றார்.8

- முனிவரின் தெய்வத் திருக்கோலமே முதலில் சொல் வேந்தரைக் கவர்ந்து விடுகின்றது. மாசில்லாத உண்மைத் தவக்கோலத்துடன் நின்ற அம் மறையவரைப் பார்த்த அளவிலேயே அவரிடம் பேசும்படியான ஒரு தெய்விக உணர்வைப் பெறுகின்றார்: பேசுகின்றார் :முனிவர் பெருமானே, வடகயிலையில் கயிலைநாதன் மலைமக ளுடன் எழுந்தருளியிருக்கும் திருக்கோலத்தை அவர்தம் அடியனான யான் கண்ணாரக் கண்டு வணங்க வேண்டு மென்ற விருப்பம் உந்தப் பெற்று வந்தேன்’ என்கின்றார்.9

இது கேட்ட அந்தத் தெய்வ முனிவர், திருக்கயிலை மலை தேவர்களாலும் அணுகுதற்கரியது. நிலவுலகில் வாழும் மனிதர்களால் அடைவதற்குரிய எளிமையுடைத் தன்று. நீர் வெம்மைமிக்க இக் கடுஞ்சுரத்தில் வந்து என்ன

7. டிெ 360 - -- 8. டிெ (361-62) 9. டிெ (363-364)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/281&oldid=634288" இலிருந்து மீள்விக்கப்பட்டது