பக்கம்:நாவுக்கரசர்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கயிலாயத் திருப்பயணம் 23.9

காரியம் செய்தீர்! அங்கம் கரைய இங்கு வந்தடைந்தது உம் அறியாமைதானா? இங்கிருந்து மீண்டு போதலே நீவீர் செய்யத்தக்கது’ என்கின்றார். இங்ஙனம் முனிவர்கோலத் துடன் வந்த இறைவன் மொழியக் கேட்ட நாவரசர், “என்னை ஆளும் ஈசனின் கயிலை கண்டல்லது நான் மீளேன்; மாளும் இவ்வுடல் ஈண்டே மரித்தாலும் கவலை கொள்ளேன்’ என மறுத்துரைக்கின்றார். 10

இந்நிலையில் தெய்வ முனிவர் நாவேந்தரின் உள்ளத் தின் உறுதியை அறிந்து விண்ணிலே மறைகின்றார் மாதவர். விண்ணில் விடையவனின் குரல் கேட்கின்றது அசரீரியாக. ஓங்கு நாவினுக்கரசனே, எழுந்திரு’ என்பது அக்குரல். அப்பர் பெருமானின் அழிந்த உடலுறுப்பெல் லாம் முன்போல நிரம்பப்பெற்று எழில் பெற்ற திருமேனி யுடன் எழுந்து நிற்கின்றார். என்னை ஆண்டு கொண் டருளிய அண்ணலே, விண்ணிலே மறைந்தருளிய வேத நாயகனே, கயிலையில் எழுந்தருளியிருக்கும் நின்திருக் கோலத்தை நான் கண்ணினால் கண்டு சேவிப்பதற்கு நயந் தருள் புரிவாயாக’ என்று நிலமிசை வீழ்ந்து இறைஞ்சு கின்றார். அப்பொழுது மீண்டும் அசரீரியாக, நீ இந்தப் பொய்கையில் மூழ்கி, நாம் கயிலையில் இருக்கின்ற திருக் கோலத்தைப் பழுதில் சீர் திருவையாற்றில் கண்டு மகிழ்வா யாக’ எனப் பணித்தருளுகின்றார்11

ஐயாற்றில் கண்ட கயிலைக் காட்சி : கயிலை நாதனின் அருள் வாக்கினைத் தலைமேற்கொண்டு நாவேந்தர் இறைவன் காட்டிய பொய்கையில் திருவைந்தெழுத்தோதி மூழ்குகின்றார். திருவையாற்றிலுள்ள ஓர் தடாகத்தில் தோன்றிக் கரையேறியதைச் சேக்கிழார் பெருமான்,

10. டிெ (365-366.) 11. டிெ (367-369)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/282&oldid=634289" இலிருந்து மீள்விக்கப்பட்டது