பக்கம்:நாவுக்கரசர்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*:40 நாவுக்கரசர்

ஆதி தேவர்தங் திருவருட்

பெருமையார் அறிந்தார்? போத மாதவர் பனிமலர்ப்

பொய்கையில் மூழ்கி மாதொர் பாகனார் மகிழும்.ஐ யாற்றிலோர் வாவி மீது தோன்றிவங் தெழுந்தனர்

- உலகெலாம் வியப்ப.12 என்று காட்டுவர்.

எம்பிரானின் கருணை இதுவென உணர்ந்த திருநாவுக் கரசர் கண்களில் அன்பு நீர் சொரிய இறைவனை வணங் கச் செல்லுகின்றார். திருவையாற்றில் உள்ள நிற்பன நடப்பன ஆகிய ஏல்லா உயிர்களும் ஆணும் பெண்ணு மாய்த் துணையொடும் திகழ்தலைக் காண்கின்றார்; அவற் றைச் சக்தியும் சிவமுமாகிய தன்மையால் பணிந்து திருக் கோவிலுக்குமுன் செல்லுகின்றார். அப்பொழுது திருக் கோயில் கயிலை மால்வரையாகத் தோற்றுகின்றது. (பார்த்தனுக்குப் பரந்தாமன் காட்டிய விசுவரூப தரிசனம் போல), அங்கே திருமால், பிரமன், இந்திரன் முதலிய தேவர்கள் அன்பினால் இறைவனைப் போற்றிசைக்கும் தோத்திர ஒலியும் மறை முழக்கமும் எம்மருங்கும் முழங்கு கின்றன. தேவர், தானவர், சித்தர், வித்தியாதரர். இயக்கர் முதலிய கணங்களும் தவ முனிவர்களும் எவ் விடத்தும் நெருங்கிப் போற்றுகின்றனர். அரம்பையர் முதலியோர் இசைபாடுகின்றனர்.இறைவனது திருமுன்னர் அவருடைய வாகனமாகிய செங்கண்மால் விடை எதிர் நிற் கின்றது. பெரிய தேவராகிய நந்தியெம்பெருமான் பிரம் பினைக் கையிலேந்தி இறைவனது திகுமுன்னிலைபில் பணி செய்து உலவுகின்றார். வெள்ளி மலையின்மேல் பவள மலையொன்று மரகதக் கொடியுடன் விளங்குவது போன்று

12. பெ. பு. திருநாவுக் - 371

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/283&oldid=634290" இலிருந்து மீள்விக்கப்பட்டது