பக்கம்:நாவுக்கரசர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

X

யினைப் பருந்தும் நிழலுமாய்ப் பின்பற்றிச் சென்று டாக்டர் க. சுப்புரெட்டியாரவர்கள் திருநாவுக்கரசர் வரலாற் றையும், அவர்தம் தேவாரத் திறத்தையும், தம் தெளிந்த நடைத் தேனில் குழைத்து விருந்தாகவும் மருந்தாகவும் வழங்கியுள்ளார்.

தொண்டைமண்டலத் திருமுனைப்பாடி நாட்டுத் திருவாமூரில் வேளாண்குடியில் புகழனாருக்கும் மாதினி யாருக்கும் பிறந்த திலகவதியாருக்குப் பின்னர்த் திருமக னாக மருள் நீக்கியார் என்னும் பெயரில் திருநாவுக்கரசர் தோன்றினார். பெற்றோர் திலகவதி யாருக்குக் கவிப்பகை யாரை மணஞ்செய்ய இசைந்திருந்த நிலையில் அவர் போரில் உயிர் கொடுத்துப் புகழ் பெற்றார். பெற்றோரும் இறந்த நிலையில் மருள் நீக்கியார் வேண்டுதலால் திலகவதியார் அம்பொன்மணி நூல் தாங்காது அனைத் துயிர்க்கும் அருள் தாங்கி மனைத்தவம் புரிந்து, தம்பி யாரைப் புரந்து வந்தார். தம் குடும்பத்தில் நேர்ந்த இறப்புகளால் நிலையாமை உ ன ர் ந் து, அறம்பல புரிந்து, .ெ ம ய் ப் .ெ ட | ரு ள் ந ட் ட ங் கொண்டு: விளங்கிய மருள்நீக்கியார், சமயங்கள் ஆனவற்றின் நல்லாது தெரிந்துணர நம்பன் அருளாமை யால் கொல்லாமை மறைந்துறையும் சமண சமயம் சார்ந்து, தருமசேனராகி விளங்கினார். திலகவதியாரின் வேண்டுதலால் இறைவன் தருமசேனருக்குச் சூலைநோய் அளிக்க, அதனை நீக்கும் இறுதி முயற்சியாகத் தமக்கையார் அளித்த திருவாளன் திருநீறு கொண்டு, நோய் நீங்கப் பெற்றுச் சைவ சமயத்திற்கு மீண்டார். பொய்யமனர் துரண்டுதலால், நீற்றறையிலிடல், நஞ்சூட்டல், களிற்றால் இடறச் செய்தல், கடலில் டாய்ச்சுதல் என்று அரசன் செய்த கொடுமைகளிலிருந்து, திருவருள் துணையால் உய்ந்து, சிவம் பெருக்கும் தொண்டினைத் தொடங்கித் தொடர்ந்தார். எழுந்திரீன் பணி செய்வீர் என்று தம் தமக்கையார் திருமொழிகளையே குருமொழியாகக் கொண்டு கையில் உழவாரமும் மெய்யில் திருநீறும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/28&oldid=634286" இலிருந்து மீள்விக்கப்பட்டது