பக்கம்:நாவுக்கரசர்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxvi

கொண்டு, கூற்றாயினவாறு எனத் தொடங்கிக் கோதில் திருப்பதிகம் பாடிச் சிவத்தொண்டு புரியலானார். ‘திருநாவுக்கரசு என இறைவனால் அன்போடு அழைக்கவும் பெற்றார்.

திருப்பதிகள் பலவும் சென்று உழவாரப் பணி செய்தும், ஒண்தமிழ்ப்பதிகங்கள் பாடியும் வந்த நாவுக்கரசர் திருஞான சம்பந்தரால் அப்பர் என அழைத்துப் போற்றப் பெற்றார். இறைவனை வேண்டி அவன் திருவடி சூட்டப் பெற்றார். தமிழகத்திலுள்ள தலங்கள் தோறும் அடியார் குழாத்துடன் சென்று பதிகத் திருத் தொண்டு புரிந்து வந்த திருநாவுக்கரசர் சிவபெருமான் கைலாயத்தில் இருக்கும் காட்சி காண விரும்பி வடநாடு சென்று இமய மலைமீது ஏறிச் செல்லுகையில் சிவபெருமான் அருளால் திரும்பப் பெற்றுத் திருவையாற்றில் தாம் விரும்பிய கயிலைக் காட்சியைக் கண்டின்புற்றார். மீண்டும் தமிழகத் தில் தம் பதிகத் தொண்டினைத் தொடர்ந்த நாவுக்கரசர் திருப்புகலூரில் இருந்தபோது, உழவாரம் இட்ட இடங்களி லெல்லாம் பொன்னும் மணியும் பொலிந்து தோன்ற, அவற்றை உழவாரத்தால் ஏந்திப் பொற்கமல வாவியுள் புக வீசினார். அகப்பற்றும் புறப்பற்றும் அற்று விளங்கிய அப்பரடிகள் என்னை இனிச் சேவடிக்கீழ் இருத்தியிடும்” என்று வேண்டித் தம் முடிவினை முன்னுணர்ந்து :புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன், பூம்புகலூர் மேவிய புண்ணியனே என்று கூறி ஒரு சித்திரைச் சதய நன்னாளில், அண்ணலார் சேவடிக்கீழ் அமர்ந்தார். திருவாமூரில் தோன்றி மெய்ப்பொருள் நாட்டத்தில் பல் சமய நெறிகள் கற்றும், சமணம் சார்ந்தும், பின்னர்ச் சைவம் திரும்பியும், தம் உழவாரத்தாலும் தேவாரத் தாலும் உயர் சைவம் பெருக்கியும், சிவபெருமான் திருவடிக்கீழ் ஒர் “தலைமறைவினை” அருளப்பெற்றுத் திருப்புகலூரில் நிறைவெய்திய நாவுக்கரசரின் என்பத் தோராண்டு வாழ்வுச் சுருக்கம் இதுவாகும், ஆமூரில் முகிழ்த்த தவ வாழ்வு, புகலூரில் பூரணம் எய்திப் பொலிவுற்றது!

தேவார மூவர்களின் தொண்டு, பதிகள் பலவற்றிற்கும்

அடியார்களோடு சென்று பதிகம் பாடி ஆங்காங்குள்ள மக்களை இறையுணர்வில் தோயச் செய்து அவ்வகையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/29&oldid=634297" இலிருந்து மீள்விக்கப்பட்டது