பக்கம்:நாவுக்கரசர்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxvii

சைவம் தழைக்கச் செய்தமையே யாதலின் அவர்களுடைய வரலாறுகளைக் கூறவந்த சேக்கிழார், அச் சான்றோர்கள் மேற்கொண்ட திருத்தலப் பயணங்களையும், ஆங்காங்கே நிகழ்ந்தனவற்றையும் முறைப்பட எண்ணி முந்து நூலாகப் படைத்துள்ளார். பிறப்பு, வளர்ப்பு, சமண் சமயம் புகுதல், சூலை நோயால் தடுத்தாட்கொள்ளப்பெறுதல், சமணர் சூழச்சி, திருவதிகை ஈடுபாடு என்னும் தலைப்பு களில் நாவுக்கரசர் சைவ சமயத்திற்கு மீண்டு, பதிகப் பெருவழி அமைத்துச் சிவத்தொண்டு தொடங்கும் வரையி லான வரலாற்றைச் சேக்கிழார் வாக்கை இடைமிடைந்து கூறியுள்ளார் இந்நூலாசிரியர். அடுத்துத் திருநாவுக்கரசர் மேற்கொண்ட புனிதப் பயனங்களை வகைப்படுத்திக் கொண்டு விரிவாக விளக்கியுள்ளார். அப்பயணங்களை நாடுகள் அடிப்படையில் சோழ நாட்டுத் திருத்தலப் பயணம், தொண்டை. நாட்டுத் திருத்தலப் பயனம், திருக் கயிலாயத் திருப்பயணம், பாண்டிநாட்டுத் திருத்தல வழிபாடு என வகுத்து விவரித்துள்ளார். இடையே, தாவுக்கரசர் திருஞானசம்பந்தரோடு இ ைண ந் து சென்றமை, அப்பூதி அடிகளோடு அமைந்த அற்புதத் தொடர்பு, திருவாரூர் நிகழ்ச்சிகள், திருப்பூந்துருத்தியில் திருமடம் அமைத்திருந்தமை போன்ற நிகழ்ச்சிகளைச் சிறப்புறத் தொகுத்துள்ளார். நாவுக்கரசர் திருப்புகலுரரில் எய்திய திருவடிப்பேற்றோடு வரலாற்றினை நிறைவு செய்து, அவர்தம் வாக்கினைப் பல்வேறுபடத் திகழும் பொதுப் பதிகங்களை விளக்குவதாலும், அருளிச் செயல் களை விளக்குவதாலும் ஆய்ந்து காட்டியுள்ளார்.

ஒரு தலத்திற்கு சென்று திருப்பதிக வழிபாடு ஆற்றிய பின்னர் அப்பர் பெருமான் அடுத்த தலம் செல்வதனைத் திரைக்காட்சி போலக் காட்ட முற்படும் திரு. இரெட்டியாரவர்கள், அதனைச் சுருக்கமும் தெளிவும்படக் காட்டுகின்றார். திருவேட்களம் என்னும் திருத்தல வழிபாட்டினைப் பின்வருமாறு (பக்.58) காட்டியுள்ளார்.

திேல்லையிலிருந்து திருவேட்களம் என்னும் திருப்பதிக்கு வருகின்றார். நன்று நாள் (4, 42) என்ற முதற்குறிப்புடைய பதிகம் பாடி, வேட்களத் திறைவனை வழிபடுகின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/30&oldid=634309" இலிருந்து மீள்விக்கப்பட்டது