பக்கம்:நாவுக்கரசர்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 நாவுக்கரசர்

மைசேர்ந்த கண்ட முடையாய் போற்றி:

மாலுக்கு ஓராழி ஈந்தாய் போற்றி: பொய்சேர்ந்த சிங்தை புகாதாய் போற்றி,

போகாதென் னுள்ளத் திருந்தாய் போற்றி; மெய்சேரப் பால்வெண்ணி றாடி போற்றி:

மிக்கார்களேத்தும் விளக்கே போற்றி: கைசே ரனல்ஏந்தி யாடீ போற்றி,

கயிலை மலையானே போற்றி, போற்றி. (5)

என்பது ஐந்தாவது தாண்டகம்.

அடுத்து “urt-ra: நல்ல’ (5.57) என்று தொடங்கும்

செய்யாய் கரியாய் வெளியாய் போற்றி,

செல்லாத செல்வமு டையாய் போற்றி: ஐயாய் பெரியாய் சிறியாய் போற்றி,

ஆகாய வண்ண முடையாய் போற்றி, வெய்யாய் தணியாய் அணியாய் போற்றி;

வேளாத வேள்வி யுடையாய் போற்றி; கையார் தழலார் விடங்கா போற்றி:

கயிலை மலையானே போற்றி போற்றி, (3)

என்பது மூன்றாவது பாடல். இந்த மூன்று பதிகங்களிலும் ஒவ்வொரு பாடலும் கயிலை மலையானே போற்றி போற்றி” என்று இறுகின்றது.இந்த அமைப்புபடிப்போரைப் பக்தியின் கயிலை மலைக்குக் கொண்டு போவது போன்ற உணர்ச்சியை எழுப்புகின்றது. இந்த மூன்று தாண்டகங் களிலும், போற்றி, போற்றி என்று அடிதோறும் வருவ: தால் இவை போற்றித் திருத்தாண்டகம்’ என்று வழங்கப் பெறுகின்றன. கயிலைக் கோலம் சதாசிவ தரிசனம்” என்று வழங்கப் பெறும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/285&oldid=634292" இலிருந்து மீள்விக்கப்பட்டது