பக்கம்:நாவுக்கரசர்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கயிலாயத் திருப்பயணம் 248

அப்பர் பெருமான் பாடிய கயிலைப் பதிகங்கள் நான்கு. இவற்றில் மூன்று தாண்டகப் பதிகங்கள். இவற்றை மேலே கண்டோம். இவற்றைத் தவிர ஒரு திருநேரிசைப் பதிகமும் கயிலைக்குரிய பதிகமாகப் பாடப்பெற்றுள்ளது. இது பாடப் பெற்ற சூழ்நிலை அறியக்கூடவில்லை. கனகமாவ யிரம’ (4.47) என்ற முதற்குறிப்புடையது இப்பதிகம்.

கனகமா வயிர முந்து

மாமணி கயிலை கண்டும் உனகனாய் அரக்க னோடி

எடுத்தலும் உமையாள் அஞ்ச அனகனாய் நின்ற ஈசன்

ஊன்றலும் அலறி வீழ்ந்தான் மனகனாய் ஊன்றி னானேல்

மறித்துநோக் கில்லை யள்றே. (1)

என்பது இப்பதிகத்தின் முதற் பாடல், இராவணனுக்கு அருளும் திறத்தைத் தமது ஒவ்வொரு பதிகத்தின் இறுதி யிலும் பாடும் மரபுடைய அப்பர் பெருமான் கயிலைக்குரிய :திருநேரிசை முழுதும் இராவணனைக் காலால் ஊன்றிய நிகழ்ச்சி ஒன்றையே வைத்துப் பாடியுள்ளார். சேக்கிழார் இத் திருநேரிசை குறித்து இடம் சூழல் இவை பற்றிப் பாட வில்லை.

இங்ஙனம் தூய தொண்டராகிய நாவேந்தர் கயிலைத் திருக்கோலத்தைக் கண்டு மகிழும் நிலையில் கயிலைநாதன் தாம் காட்டிய கயிலைக் காட்சியை மாற்றித் திருவையாற் றமைந்த பழைய நிலையினைப் புலப்படுத்தியருளுகின்றார். இந்நிலையில் அப்பர் பெரிதும் வருந்தி ஒருவாறு தெளிவு பெறுகின்றார். கயிலைநாதன் அருளால் தாம் கண்ட கயிலைக் காட்சியை உலக மக்கள் உணர்ந்து மகிழும் வண்ணம் மாதர் பிறைக் கண்ணியானை (4.3) என்ற பதிகத்தைப் பாடுகின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/286&oldid=634293" இலிருந்து மீள்விக்கப்பட்டது