பக்கம்:நாவுக்கரசர்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 நாவுக்கரசர்

மாதர்பிறைக் கண்ணி யானை

மலையான் மகளொடும் பாடிப் போதொடு நீர்சுமந் தேத்திப்

புகுவா ரவர்பின்பு புகுவேன் யாதும் சுவடு படாமல்

ஐயா டைகின்ற போது e காதல் மடப்பிடி யோடும்

களிறு வருவன கண்டேன் கண்டே னவர்திருப் பாதம் கண்டறி யாதன கண்டேன். (1)

என்பது இப்பதிகத்தின் முதற் பாடல். கயிலைக் கோலங் காட்டிய ஐயாற்றிறைவனைத் தொழுது திருத்தாண்டகம் திருக்குறுந்தொகை, திருநேரிசை, திருவிருத்தம் முதலிய சொன்மாலைகளைப் பாடித் திருத்தொண்டு செய்து அங்கு அமர்ந்திருக்கின்றார்.

நாவேந்தர் திருக்காளத்தி மலையில் வீற்றிருந்தருளிய இறைவனை வழிபட்டபோது திருக்கயிலாய மலையைக் கண்டு சேவிக்க வேண்டும் என்ற பெருவேட்கை அவருள்ளத் தில் எழுந்தது என்பதை, அவர் காளத்தி ஈசனைப் பரவிப் போற்றின திருத்தாண்டகத்தில்,

கணத்தகத்தான் கயிலாயத் துச்சி யுள்ளான்

காளத்தியான் அவனென் கண்ணு ளானே. (6.8:5)

எனக் குறிப்பிடுதால் உணரப்படும். இந்த வேட்கையுந்த அடிகள் காடு மலை நாடு முதலியவற்றைக் கடந்து செல்லும் வழியில் கயிலைநாதன் தவமுனிவர் வடிவுடன் தோன்றிப் பின்னர் மறைந்து அசரீரியாகத் தடாகத்தில் மூழ்கித் தம்மைக் காணுமாறு கூறி அருள்புரிந்தனர் என்ற செய்தி, -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/287&oldid=634294" இலிருந்து மீள்விக்கப்பட்டது