பக்கம்:நாவுக்கரசர்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 . - நாவுக்கரசர்

செறிவித்தவாறு தொண்டனேனைத் தன் பொன்னடிக்கீழ் என்னையே (நேரிசை) என்றும் பாடியுள்ளார்: ஐயாறன் அடித்தலமே என்றும், கண்டேன் அவர் திருப்பாதம் கண் டறியாதன கண்டேன்’ என்றும் பாடும் இடங்களில் எல்லாம் கயிலைநாதனின் திருவடிச் சிறப்புகளே அதிகம் சிந்திக்கப்படுகின்றன.

அந்திவட்ட (4.98) என்று தொடங்கும் செந்தமிழ்த் திருவிருத்த மாலையில் இரண்டே மலர்கள்தாம் உள்ளன. இதில்,

அந்திவட் டத்திங்கட் கண்ணியன்

ஐயா றமர்ந்துவந்தென் புந்திவட் டத்திடைப் புக்குகின்

றானையும் பொய்யென்பனோ, சிந்திவட் டச்சடைக் கற்றை

யம்பலச் சிறிதலர்ந்த நந்திவட் டத்தொடு கொன்றை

வளாவிய கம்பனையே? (1)

என்பது முதல் மலர். இதுவும் இறைவனின் திருவடிகளைப் பலவாறு போற்றுகின்றது.

இதனை அடுத்த செந்தமிழ் மாலை விடகிலேன்’ (4.13) என்ற முதற் குறைப்புடை பழந்தக்க ராகம் பண் ணுடைய மாலையாகும். இதில்,

ரோனே தீயானே நெதியானே கதியானே ஊரானே உலகானே உடலானே உயிரானே பேரானே பிறைசூடி பிணிதீர்க்கும் பெருமானென் (று) ஆராத ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே. (6)

என்து ஆறாவது நறுமணம் கமழும் தமிழ்மலர். பாடல்கள்

யாவும் தாம் ஐயாறமர்ந்த தேனுக்குத் தாம் அடிமையாகி உய்ந்தமையைப் பன்னி பன்னி உரைக்கின்றார். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/295&oldid=634303" இலிருந்து மீள்விக்கப்பட்டது