பக்கம்:நாவுக்கரசர்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பூந்துருத்தி நிகழ்ச்சிகள் 253

இங்ஙனம் இறைவனுக்குப் பல்வேறு தமிழ் மாலை களைச் சாத்தி மகிழ்ந்திருந்த நாவுக்கரசர் திருநெய்த்தானம்’ என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். ஐந்து செந்தமிழ் மாலைகளால் நெய்த்தானத் தீசனைச் சேவிக்கின்றார். இவற்றுள் காலனை வீழ (4.37) என்று தொடங்கும் செந்தமிழ்த் திருநேரிசை மாலை ஒன்று. இதில்,

பந்தித்த சடையின் மேலே

பாய்புன லதனை வைத்து அந்திப்போ தனலும் ஆடி

அடிகள்ஐ யாறு புக்கார்; வந்திப்பார் வணங்கி நின்று

வாழ்த்துவார் வாயி னுள்ளார்; சிந்திப்பார் சிங்தை யுள்ளார்

திருந்துகெய்த் தான னாரே. (8) என்பது தமிழ் மணம் கமழும் எட்டாவது வாடா நறுமலர், அடுத்து வழிபடப் பயன்படுத்திய திருவிருத்தச் செந்தமிழ் மாலை பாரிடம் சாடிய’ (4.89) என்ற முதற் குறிப்பினை யுடையது. இதில்,

விரித்த சடையினன் விண்ணவர் கோன்விட முண்டகண்டன் உரித்த கரியுரி மூடியொன்

னார்மதில் மூன்றுடனே எரித்த சிலையினன் ஈடழி

யாதென்னை யாண்டுகொண்ட தரித்த உமையவளோடுநெய்த் தானத் திருந்தவனே. (8) என்பது எட்டாவது நறுந்தமிழ் மலர்.

4. கெய்த்தானம் (தில்லை ஸ்தானம்) : தஞ்சையி லிருந்து 10 கல் தொலைவு. பேருந்து வசதியுண்டு. சப்த ஸ்தானங்களுள் ஒன்று. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/296&oldid=634304" இலிருந்து மீள்விக்கப்பட்டது