பக்கம்:நாவுக்கரசர்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 நாவுக்கரசர்

இதனையடுத்தது கொல்லியான் (5.34) என்ற முதற் குறிப்பினையுடைய திருக்குறுந்தொகைச் செந்தமிழ் மாலை. இதில்,

கொள்ளித் தீயெரி வீசிக் கொடியதோர் கள்ளிக் காட்டிடை யாடுவர் காண்மினோ தெள்ளித் தேறித் தெளிந்துகெய்த் தானனை உள்ளத் தால்தொழு வாரும்பர் வாணரே. (7) என்பது ஏழாவது நறுமணம் கமழும் செந்தமிழ் மலர். இதனையடுத்துச் சூட்டிய மாலைகள் இரண்டும் செந்தமிழ் நயங்கொழிக்கும் திருத்தாண்டக மாலைகள்,

முதல் தாண்டகமாலை வகையெலாம்’ (6,41) என்ற முதற் குறிப்பினை யுடையது.

அல்லாய்ப் பகலானாய் நீயே என்றும் ஆதிக் கயிலாயன் நீயே என்றும் கல்லாலம் அமர்ந்தாயும் நீயே என்றும்

காளத்திக் கற்பகமும் நீயே என்றும் சொல்லாய்ப் பொருளானாய் நீயே என்றும்

சோற்றுத்துறை யுறைவாய் நீயே என்றும் செல்வாய்த் திருவானாய் நீயே என்றும்

கின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே, (3) என்பது மூன்றாவது தமிழ்மணம் கமழும் வாடா நறுமலர். இப்பதிகம் முழுவதும் வேற்றுத் தலங்களின் ஈசனை நினைந்தவாறு பாடுகின்றார் வாகீசர். இவர்களனைவரும் தனது நெஞ்சில் உள்ளான் என்று கூறி மகிழ்வர்.

இரண்டாவது தாண்டக மாலை “மெய்த்தானத்’ (6.42) என்ற முதற் குறிப்புடையது. இதில்,

மிறைபடுமிவ் வுடல்வாழ்வை மெய்யென் றெண்ணி

வினையிலே கிடந்தமழுந்தி வியவேல் நெஞ்சே! குறையுடையார் மனத்துளான் குமரன் தாதை

கூத்தாடுங் குணமுடையான கொலைவேற் கையான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/297&oldid=634305" இலிருந்து மீள்விக்கப்பட்டது