பக்கம்:நாவுக்கரசர்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பூந்துருத்தி நிகழ்ச்சிகள் 257

திருத்தாண்டகம், திருக்குறுந்தொகை, திருவிருத்தம் ஆகிய மூன்று பதிகங்களால் பாடிப் போற்றுகின்றார். முதலில் ‘நில்லாத நீர்சடைமேல் (6.43) என்ற முதற் குறிப்புடைய செந்தமிழ்த் திருத்தாண்டக மாலைகொண்டு சேவிக்கின் றார். இதில், -

எனக்கென்றும் இனியானை எம்மான் தன்னை எழிலாரும் ஏகம்பம் மேயான் தன்னை மனக்கென்றும் வருவானை வஞ்சர் நெஞ்சில்

கில்லானை கின்றியூர் மேயான் தன்னைத் தனக்கென்றும் அடியேனை யாளாக் கொண்ட

சங்கரனைச் சங்கவார் குழையான் தன்னைப் புனக்கொன்றைத் தாரணிந்த புனிதன் தன்னைப்

பொய்யிலியைப் பூந்துருத்தி கண்டேன் நானே. (3)

என்பது தமிழ் மணம் கமழும் மூன்றாவது வாடா நறுமலர். இப் பதிகத்தில் தம் விருப்பம் அனைத்தையும் ஒரு சேரத் தொகுத்துப் பாடியுள்ளார். பூந்துருத்தி நாதனான பொய் யிலியைக் கண்ட மகிழ்ச்சியில் பாடிய அற்புதப் பதிகம் இது. கண்டேன் நானே’ என்று பாடல்தோறும் முடி வதால் இதனை அப்பரின் கண்டபத்து’ எனச் சொல்லத் தட்டில்லை.

இதனை அடுத்துப் பாடியது கொடிகொள் (5,32) என்ற முதற்குறிப்புடைய திருக்குறுந்தொகைச் செந்தமிழ் மாலை. இதில். -

ஒருத்த னாய்உல. கேழுந்தொழ நின்று பருத்த பாம்பொடு பான்மதி கங்கையும் பொருத்த னாகிலும் பூந்துருத் திங்நகர்த் திருத்தன் சேவடிக் கீழ்நாம் இருப்பதே. (7) என்பது ஏழாவது வாடாத தமிழ் மலர். இம் மாலை சேவடிக்கீழ் நாம் இருப்பதே என்ற தொடரால் நடை

நா-17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/300&oldid=634310" இலிருந்து மீள்விக்கப்பட்டது