பக்கம்:நாவுக்கரசர்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 நாவுக்கரசர்

பெறுகின்றது. இதனைச் சேக்கிழார் பெருமான் இருப் போம் திருவடிக்கீழ்’ என்று குறிப்பர்.:

மூன்றாவதாக அப்பர் பெருமான் “ஆந்துருத்திப் பொய் யிலியை மாலினைமாலு (4.88) என்ற திருவிருத்தச் செந்தமிழ் மாலையால் போற்றுவர். இதில்,

அந்தியை நல்ல மதியினை

யார்க்கும் அறிவரிய செந்தியை வாட்டும்செம் பொன்னினைச்

சென்றடைங் தேனுடைய புக்தியைப் புக்க அறிவினைப்

பூந்துருத் திய்யுறையும் நந்தியை கங்கள் பிரான்றனை கானடி போற்றுவதே. (9)

என்பது தமிழ் மணம் கமழும் ஒன்பதாவது வாடா நறுமலர். இப்பதிகமும் அடி போற்றுவதே என்றுதான் முடிகின்றது. இதனைச் சேக்கிழார் பெருமான் நாம் அடி போற்றுவது’ என்னும் திருவிருத்தத்தைப் பொங்கு தமிழ்ச் சொல் விருத்தம்’ என்று குறிப்பிடுவர்?.

திருப்பூந்துருத்திபற்றிய மூன்று பதிகங்களிலும் அவர் இத்திருப்பதியைக் காணவரும் காதலோடு கூடிய வேகம் தெரிகின்றது. இக்குறிப்பிட்ட மூன்று பதிகங்களிலும் முழுப் பார்வை செலுத்தி அவர்தம் வரலாற்றையும் கூர்ந்து நோக்கினால் ஒரு பேருண்மை புலனாகும். ஐயாறு, பூத் துருத்தி, புகலூர் முதலான இடங்களில் அடிக்கீழ் இருத் தினையே’, இருப்போம் திருவடிக் கீழ்”, *உன்னடிக்கே போதுகின்றேன்” என்று பாடுவதைக் காணலாம். இவை யெல்லாம் அப்பர் பெருமானின் வாழ்வில் அற்புதங்கள் நிகழ்ந்த தலங்கள்; ஞான அநுபவங்கள் சுடர்விட்ட இடங்

7. பெ. பு: திருநாவுக். 388 8. டிெ 389,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/301&oldid=634311" இலிருந்து மீள்விக்கப்பட்டது