பக்கம்:நாவுக்கரசர்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 நாவுக்கரசர்

புகுந்து பிள்ளையார் அமர்ந்து வரும் முத்துச் சிவிகை யினைத் தாங்கி வருகின்றார். அப்பொழுது சம்பந்தப் பெருமான் அப்பர் எங்குள்ளார்?’ என்று வினவ, பிள்ளை யாரின் அன்பின் திறத்தைக் கண்டு நெஞ்சம் நெக்குருகிய அப்பர் பெருமான் உம் அடியேன் உம் அடிகள் தாங்கி வரும் பெருவாழ்வு வத்தெய்தப்பெற்று இங்குற்றேன்: என மொழிகின்றார் . உள்ளப் பதைப்புடன் சம்பந்தர் விரைந்திழிந்து அப்பரை வணங்குகின்றார். அவரும் விரைந்து பிள்ளையார் வணங்குவதற்கு முன் எதிர் வணங்குகின்றார். இவ்விரு பெருமக்களின் நட்பின் திறத்தைக் கண்ட அடியார்கள் எல்லோரும் உளமுருகித் தொழுது போற்றுகின்றனர். இருவரும் திருப்பூந்துருத்தித் திருக்கோயிலை அடைந்து பொய்யிலிப் பெருமானைப் பணிந்து போற்றித் திருமடத்தில் இனிது அமர்கின்றனர்.

சம்பந்தப் பெருமான் தாம் பாண்டி நாட்டில் சமணர் களை வாதில் வென்றது, தென் தமிழ் நாட்டில் திருநீறு பரப்பியது ஆகிய செய்திகளையும், பாண்டியன் மாதேவி மங்கையர்கரசியாரது சிவபக்தி, மந்திரியார் குலச்சிறை யாரது திருத்தொண்டின் பெருமை ஆகிய செய்திகளையும் நாவுக்கரசருக்கு எடுத்துரைக்கின்றார். இவற்றைக் கேட்டு மகிழ்ந்த ஆளுடைய அடிகள் பாண்டி நாட்டுத் திருத்தலங்களை வழிபடத் திருவுளங் கொள்ளுகின்றார். அப்பர் பெருமானும் தாம் தொண்டை நாட்டிற்குச் சென்று அங்குள்ள திருத்தலங்களை வழிபட்ட விவரங் களையும் தமிழ் மாலைகளால் போற்றியதையும் பிள்ளை யாருக்கு எடுத்துரைக்கின்றார். அங்ஙனமே காழிப் பிள்ளை யாரும் தொண்டை நாட்டுத் திருத்தலங்களைச் சேவிக்க விரும்பி அப்பர் பெருமானிடம் விடைபெற்று ஏகுகின்றார். அப்பர் பெருமானின் பாண்டி நாட்டுத் திருத்தல வழி பாட்டை அடுத்துக் காண்போம்.

10. டிெ 396, - 11, டிெ 399.400,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/303&oldid=634313" இலிருந்து மீள்விக்கப்பட்டது